ஆம்ஸ்டல்வீன்: உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு 2-வது சுற்றில் இந்திய அணி நேற்று முன்தினம் இரவு ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய மகளிர் அணி அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற சூழ்நிலை இருந்தது.
ஆனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததால் இந்திய மகளிர் அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது. மாறாக ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு முன்னேறியது. அந்த அணி ஒட்டுமொத்தமாக இந்திய அணியைவிட கூடுதலாக ஒரு கோல் அடித்திருந்தால் அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.
இந்திய அணி 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.