விளையாட்டு

மகளிர் கிரிக்கெட்: இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணத்தில் டி20 தொடர் கூடுதலாக சேர்ப்பு

செய்திப்பிரிவு

ஜோகன்னஸ்பர்க்: இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி வரும் டிசம்பர் மாதம் தென் ஆப்​பிரிக்​கா​வில் சுற்​றுப்​பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட், 3 ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட திட்​ட​மிட்டு இருந்​தது.

இந்​நிலை​யில் இந்த போட்டி மாற்றி அமைக்​கப்​பட்டு கூடு​தலாக 3 டி20 ஆட்​டங்​களும் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. டெஸ்ட் போட்டி டிசம்​பர் 9 முதல் 12 வரை நடை​பெறுகிறது. இதைத் தொடர்ந்து 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஒரு​நாள் போட்​டித் தொடர் நடத்தப்படுகிறது.

இதன் பின்​னர் 26 முதல் 30-ம் தேதி வரை 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடர் நடை​பெறும் என தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் வாரி​யம் அறி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT