விளையாட்டு

மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பை கால் இறுதி சுற்றில் இந்திய அணி

செய்திப்பிரிவு

மோகி: சீ​னா​வின் மோகி நகரில் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் பிரி​வில் இந்​திய அணி தனது 3-வது லீக் ஆட்​டத்​தில் நேற்று ஜப்​பானை எதிர்த்து விளை​யாடியது. இதில் இந்​திய அணி 7-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது.

இந்​திய அணி தரப்​பில் பூர்​ணிமா யாதவ் (14, 46-வது நிமிடம்), கீதா யாதவ் (41, 45-வது நிமிடம்) ஆகியோர் தலா 2 கோல்​களும் கிருஷ்ண சர்மா (5-வது நிமிடம்), சுப்​ரியா (9-வது நிமிடம்), சனிகா சந்​திர​காந்த் (50-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இந்​திய மகளிர் அணிக்கு இது 3-வது வெற்​றி​யாக அமைந்​தது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் 4-1 என்ற கோல் கணக்​கில் கொரி​யா​வை​யும், 2-வது ஆட்​டத்​தில் 11-1 என்ற கோல் கணக்​கில் மலேசி​யா​வை​யும் வீழ்த்​தி​யிருந்​தது.

இதன் மூலம் 9 புள்​ளி​களு​டன் இந்​திய அணி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது. இந்​திய மகளிர் அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் இன்று சீனாவை எதிர்​கொள்​கிறது. சீனா 2 ஆட்​டங்​களில் வெற்றி பெற்று 6 புள்​ளி​களு​டன்​ உள்​ளது.

SCROLL FOR NEXT