விளையாட்டு

கு​வாஹாட்டி பாட்​மிண்​டன்: சன்ஸ்கார் முதலிடம்

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: குவாஹாட்டி மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் போட்டியில் இந்​திய வீரர் சன்​ஸ்​கார் சரஸ்​வத் சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

குவாஹாட்​டி​யில் இந்த போட்டி நடை​பெற்று வந்​தது. நேற்று நடை​பெற்ற இறு​திச் சுற்​றுப் போட்​டி​யில் சன்​ஸ்​கார் சரஸ்​வத்​ 21-11, 17-21, 21-13 என்ற புள்​ளி​கள் கணக்​கில் சக நாட்டு வீரர் மிதுன் மஞ்​சு​நாத்தை வீழ்த்தினார்.

மகளிர் பிரிவில் சீன தைபே வீராங்​கனை துங் சியோ - ​தாங் 21-18, 21-8 என்ற கணக்​கில் இந்​திய வீராங்​கனை தன்வி சர்​மாவை வென்றார்​.

SCROLL FOR NEXT