விளையாட்டு

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: மகளிர் பிரிவில் பட்டம் வென்றார் வைஷாலி

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி

வேட்டையன்

பாஃபோஸ்: நடப்பு கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மகளிர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர்.வைஷாலி பட்டம் வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.

சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் நடைபெற்ற இந்த கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில், புதன்கிழமை அன்று இறுதிச்சுற்றில் ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோவை தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் வைஷாலி வீழ்த்தினார். இதன் மூலம் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

இறுதி சுற்றுக்கு முன்னதாக கஜகஸ்தான் வீராங்கனை பிபிசாராவுடன் 7.5 புள்ளிகள் பெற்று சமனில் இருந்தார் வைஷாலி. இதில் திவ்யா உடனான ஆட்டத்தை பிபிசாரா சமனில் முடித்தார். வைஷாலி தனது இறுதி சுற்று ஆட்டத்தில் லாக்னோவை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் இதில் பட்டம் வென்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT