விளையாட்டு

டி20 போட்​டிகளில் 16-வது அரை சதம் - ஹர்​மன்​பிரீத் விளாசல்

செய்திப்பிரிவு

திரு​வனந்​த​புரம்: இலங்கை அணிக்​கு எ​தி​ரான 5-வது மற்​றும் கடைசி சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய மகளிர் அணி​யின் கேப்​டன் ஹர்​மன் பிரீத் கவுர் அரை சதம் விளாசி​னார்.

இந்​தி​யா, இலங்​கை அணிகளுக்கு இடையி​லான இந்​தப் போட்டி நேற்று திருவனந்​த​புரம் மைதானத்​தில் நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய இந்​திய அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 175 ரன்​கள் குவித்​தது. கேப்​டன் ஹர்​மன் ​பீரித் கவுர் 43 பந்​துகளில் 9 பவுண்​டரி, ஒரு சிக்​ஸருடன் 68 ரன்​கள் விளாசி​னார்.

சர்​வ​தேச டி20 போட்​டிகளில் இது அவரது 16-வது அரை சதமாக அமைந்​தது. இதன்​ மூலம் டி20 போட்​டிகளில் அதிக அரை சதம் விளாசிய இந்​திய வீராங்​க​னை​கள் வரிசை​யில் 3-வது இடத்​தில் ஹர்​மன்​பிரீத் உள்​ளார்.

SCROLL FOR NEXT