மஸ்கட்: சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் இளையோருக்கான ஹாக்கி 5 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய சப்-ஜூனியர் சிறுவர் அணி 7-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 வீரர்களுக்கு பதிலாக 6 வீரர்களுடன் விளையாடியது. இதை கண்டுபிடித்த நடுவர்கள் உடனடியாக பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்து 2 வீரர்களை வெளியேற்றினர். இதனால் வெறும் 3 வீரர்களுடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. சப்-ஜூனியர் சிறுமியர் பிரிவில் இந்திய அணி 3-6 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வி அடைந்தது.