விளையாட்டு

பகலிரவு டெஸ்டில் இந்திய மகளிர் அணி தடுமாற்றம்

செய்திப்பிரிவு

பெர்த்: இந்​தியா - ஆஸ்​திரேலியா மகளிர் அணி​கள் இடையி​லான பகலிரவு டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெர்த் நகரில் நடை​பெற்று வரு​கிறது.

இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய மகளிர் அணி 198 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 52 ரன்​கள் சேர்த்​தார். இதையடுத்து விளை​யாடிய ஆஸ்​திரேலிய மகளிர் அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 27 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 96 ரன்​கள் எடுத்​தது.

          

எலிஸ் பெர்ரி 43, அனாபெல் சுதர்​லேண்ட் 20 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய ஆஸ்​திரேலிய மகளிர் அணி 90.4 ஓவர்​களில் 323 ரன்​களை குவித்து ஆட்​ட​மிழந்​தது. அனாபெல் சுதர்​லேண்ட் 171 பந்​துகளில், 17 பவுண்​டரி​களு​டன் 129 ரன்​கள் விளாசி​னார்.

இந்​திய மகளிர் அணி தரப்​பில் சாயாலி சத்​கரே 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். கிரந்தி கவுடு, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 125 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய மகளிர் அணி நேற்​றைய 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 29 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 105 ரன்​கள் எடுத்​தது.

ஸ்மிருதி மந்​தனா 2, ஷபாலி வர்மா 5, ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 14, கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 11, தீப்தி சர்மா 9, ரிச்சா கோஷ் 0 ரன்​களில் நடையை கட்​டினர். பிர​திகா ராவல் 43, ஸ்நே ராணா 14 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

கைவசம் 4 விக்​கெட்​கள் இருக்க 20 ரன்​கள் பின்​தங்கி உள்ள இந்​திய மகளிர் அணி இன்று 3-வது நாள் ஆட்​டத்​தை எதிர்​கொள்​கிறது.

SCROLL FOR NEXT