தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ஹர்மித் தேசாய், யஷஸ்வினி கோர்படே ஜோடி 3–2 (11-6, 8-11, 8-11, 11-9, 11-9) என்ற கணக்கில் தென் கொரியாவின் பார்க் கேங்கியான், லீ டேவுன் ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
இதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. கடைசியாக 1954-ல் நடைபெற்ற தொடரில் இந்தியாவின் யதின் வியாஸ், மீனா பராண்டே ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது. அதன் பின்னர் தற்போது 72 ஆண்டுக்குப் பின்னர் கலப்பு இரட்டையர் பிரிவில் ஹர்மித், யஷஸ்வினி ஜோடி பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளது.