தோகா: ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இஷா சிங், மனு பாகர், திவ்யா சுப்பராஜு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,761 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது.
தென் கொரியா 1,748 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், வியட்நாம் 1,745 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றன.