விளையாட்டு

இந்தியா யு-19 அணி அபார வெற்றி

செய்திப்பிரிவு

கொழும்பு: இந்தியா யு-19 – இலங்கை யு-19 அணி​கள் இடையிலான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​தியா யு-19 அணி 105.2 ஓவர்​களில் 411 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக மனால் சவு​கான் 150, குஷ​ராக்ரா ஓஜா 111 ரன்​கள் விளாசினர்.

இலங்கை யு-19 முதல் இன்​னிங்​ஸில் 52.1 ஓவர்​களில் 148 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக துல்​னித் சிகேரா 31, சேத்​மிகா செனே​விரத்னே 25 ரன்​கள் சேர்த்​தனர். இதையடுத்து 263 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​தியா யு-19 அணி 40.2 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 208 ரன்​கள் எடுத்த நிலை​யில் டிக்​ளேர் செய்​தது. லக் ஷயா ராய்ச்​சந்​தனி 100 ரன்​களும், மனால் சவு​கான் 51 ரன்​களும் விளாசினர்.

தொடர்ந்து 472 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இலங்கை யு-19 அணி நேற்​றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 76.5 ஓவர்​களில் 260 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக செனுஜா வெகுனகோடா 64, கேப்​டன் விமத் தினசரா 64, சேத்​மிகா செனே​விரத்னே 42 ரன்​கள் சேர்த்​தனர். இந்​தியா யு-19 அணி சார்​பில் ரோஹித் யாதவ் 4, சிகுருபதி வெங்​கடா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 211 ரன்​கள் வித்தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​தியா யு-19 அணி 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடரை 1-0 என கைப்​பற்​றி கோப்பையை வென்​றது.

SCROLL FOR NEXT