விளையாட்டு

“4 பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வேண்டும்” - சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 4 பந்​து​வீச்​சாளர்​களு​டன் இந்​திய கிரிக்​கெட் அணி களமிறங்க வேண்​டும் என்று இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​டன் சுனில் கவாஸ்​கர் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக ஜியோஸ்​டாருக்கு அளித்த பேட்​டி​யில் சுனில் கவாஸ்​கர் கூறிய​தாவது: இந்​திய அணி​யின் பேட்​டிங் வரிசை நன்​றாக உள்​ளது. ஆனால் பேட்​டிங் வரிசையை நீட்​டிக்க முயற்​சிக்​கும் ​போது அணி​யின் பந்​து​வீச்சு பலவீனமடைகிறது.

இதைத் தவிர்ப்​ப​தற்​கான வழிகளை நாம் தேட வேண்டும் அதே​போல், ஹர்​திக் பாண்​டி​யா​வுக்கு மாற்​றாக ஒரு வீரரை தேடும் முயற்​சி​யில் இந்​திய அணி நிர்​வாகம் அளவுக்கு அதி​க​மாக ஈடு​படு​கிறது. ஆனால், ஹர்​திக் பாண்​டி​யா​வுக்கு ஈடு இணை​யான வீரர் தற்​போது எவரும் இல்​லை. எனவே, அவரைப் போன்ற ஒரு வீரரைத் தேடு​வதற்​குப் பதிலாக, வெவ்​வேறு பொறுப்​பு​களைச் செய்​யக்​கூடிய திறமை​யான வீரர்​களை தேடிக் கண்​டு​பிடித்து அணி​யில் சேர்க்​கவேண்​டும்.

போட்​டிகளின்​போது இந்​திய அணி, குறைந்​த​பட்​சம் நான்கு பிரத்​யேக பந்​து​வீச்​சாளர்​களு​டன் களமிறங்க வேண்​டும். 4 பிர​தான பந்​து ​வீச்​சாளர்​களு​டன் 2 ஆல்​-ர​வுண்​டர்​களை அணி​யில் சேர்க்​கலாம். குறிப்​பாக இளம் வீரர் நமன் திர் அதிரடி​யாக விளை​யாடு​கிறார். அவர் பேட்​டிங், பந்​து​வீச்சு ஆகிய இரண்​டிலும் பங்​களிப்பு செய்​கிறார்.

அதே​போல் நடு​வரிசை​யில் அக்​சர் படேல் சிறப்​பாக விளை​யாடக்​கூடிய​வர். நான்​கைந்து ஓவர்​கள் வீசி​னாலும் அதில் விக்​கெட் வீழ்த்​தக் கூடிய பந்​து​வீச்​சாளர் அவர். அணி​யின் 8-வது வீரர் வரை நாம் பேட்​டிங் வரிசையை நீட்​டிக்​கும்​போது, அணி​யின் பந்​து​வீச்சு பலவீனமடைகிறது. அந்த இடத்​தில்​தான் இந்​திய அணி தோல்​வியைச் சந்​திக்க நேரிடு​கிறது.

மற்ற தொடர்​களு​டன் ஒப்​பிடும்​போது இந்​தத் தொடரில் அபிஷேக் சர்​மா​விட​மிருந்து எதிர்​பார்த்த அளவுக்கு ஆட்​டம் வெளிப்​பட​வில்​லை. 200 என்ற ஸ்டிரைக் ரேட்​டில் விளை​யாடும் எந்​தவொரு வீரருக்​கும் சில தொடர்​களில் குறைந்த ரன்​கள் எடுக்க வேண்​டிய நிலை வரும். அவர் தொடர்ச்​சி​யாக ஒவ்​வொரு போட்​டி​யிலும் அதிக ரன்​களைக் குவிப்​பார் என்று எதிர்​பார்ப்​பது நமது தவறான புரிதலாகும். இவ்​வாறு கவாஸ்​கர் தெரி​வித்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT