இந்​தி​யா​வின் இஷா சிங்

 
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் இஷா சிங்

தடகளம் முதல் கிரிக்கெட் வரை

செய்திப்பிரிவு

நகோயா: 20-வது ஆசிய விளை​யாட்டு போட்டி ஜப்​பானின் ஐச்​சி-நகோயா மாகாணத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 10-வது நாளான நேற்று துப்​பாக்கி சுடு​தலில் மகளிருக்​கான 25 மீட்​டர் பிஸ்​டல் தனி​நபர் பிரிவு இறு​திப் போட்டி நடை​பெற்​றது.

8 பேர் பங்​கேற்ற இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் இஷா சிங் முக்​கிய​மான தருணத்​தில் சிறப்​பாக செயல்​பட்டு பதக்க போட்​டிக்​குள் நுழைந்​தார். இதில் வெள்ளி பதக்​கத்​துக்​கான சுற்​றில் இந்​தி​யா​வின் இஷா சிங்​கும், வட கொரி​யா​வின் கிம் ஹியான் சுக்​கும் 34 புள்​ளி​களு​டன் சமநிலை​யில் இருந்​தனர். இதனால் ஷூட்​-ஆஃப் நடத்​தப்​பட்​டது. இதில் முதல் ஷூட்​-ஆஃபில் இரு​வரும் 3-3 என சமநிலை வகித்​தனர்.

இதனால் 2-வது ஷூட்​-ஆஃப் நடத்​தப்​பட்​டது. இதி​லும் இரு​வரும் 3-3 என சமநிலையை எட்​டினர். தொடர்ந்து நடை​பெற்ற 3-வது ஷூட்​-ஆஃபில் இஷா சிங் 3-2 என வெற்றி பெற்று வெள்​ளிப் பதக்​கத்தை உறுதி செய்​தார். வெள்​ளிப் பதக்​கத்தை உறுதி செய்த இஷா சிங், தங்​கப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் சீனா​வின் ஷியோ ஜியாரூய்​சு​வானுடன் மோதி​னார்.

இதில் இரு​வரும் தலா 38 புள்​ளி​கள் சேர்த்​தனர். இதனால் தங்​கப் பதக்​கம் யாருக்கு என்​பதை தீர்​மானிக்க ஷூட்​-ஆஃப் நடத்​தப்​பட்​டது. இதில் முதல் ஷூட்​-ஆஃபில் 4-4 என சமநிலை உரு​வானது.

ஆனால் அடுத்த ஷூட்​-ஆஃபில் இஷா சிங் 2 புள்​ளி​களை சேர்க்க ஷியோ ஜியாரூய்​சு​வான் 3 புள்​ளி​களை சேர்த்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கத்தை தட்​டிச் சென்​றார். இஷா சிங் வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். கிம் ஹியான் சுக் வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்றி​னார்.

முன்​ன​தாக, நடை​பெற்ற தகுதி சுற்​றில் ஒலிம்​பிக்​கில் இரு பதக்​கம் வென்ற இந்​தி​யா​வின் மனு பாகர் 579 புள்​ளி​களு​டன் 11-வது இடம் பிடித்து இறு​திப் போட்​டிக்கு தகுதி பெறத் தவறி​னார். இம்​முறை ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் மனு பாகர் பதக்​கம் ஏது​மின்றி திரும்​புவது ரசிகர்​களை ஏமாற்​றம் அடையச் செய்​துள்ளது.

குல்வீர் சிங்

1,500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்

தடகளத்​தில் ஆடவருக்​கான 1,500 மீட்​டர் ஓட்​டத்​தில் இந்​தி​யா​வின் குல்​வீர் சிங் பந்தய தூரத்தை 3:36.72 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். ஜப்​பானின் கசுடோ ஈசாவா பந்தய தூரத்தை 3:36.35 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். 37 விநாடிகளில் குல்​வீர் சிங் தங்​கப் பதக்​கத்தை நழுவ விட்​டார்.

ஜப்​பானின் நகியா மோரி (3:37.92) வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​றி​னார். நடப்பு ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் குல்​வீர் சிங்​ பதக்​கம் வெல்​வது இது 2-வது முறை​யாகும். அவர், ஏற்​கெனவே 10 ஆயிரம் மீட்​டர் ஓட்​டத்​தி​லும் வெள்​ளிப்​ பதக்​கம்​ வென்​றிருந்​​தார்​.

பாருல் சவுத்ரிக்கு வெண்கலம்

மகளிருக்​கான 5 ஆயிரம் மீட்​டர் ஓட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா​வின் பாருல் சவுத்ரி பந்தய தூரத்தை 15:14.61 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​றி​னார். மற்​றொரு இந்​திய வீராங்​க​னை​யான சீமா (15:36.06) 6-வது இடம் பிடித்​தார். பக்​ரைனின் வில்ஃபிரட் யாவி (15:10.18) தங்​கப் பதக்​க​மும், ஜப்​பானின் நோஸோமி தனகா (15:11.65) வெள்​ளிப் பதக்​க​மும் வென்​றனர். நடப்பு ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் பாருல் சவுத்​ரி​யின் 2-வது பதக்​கம் இது​வாகும். அவர், 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள்​சேஸிலும் வெண்​கலப் பதக்​கம் வென்​றிருந்​தார்​.

14 வயது வீராங்கனையிடம் சுரேகா தோல்வி

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் வில்​வித்​தை​யில் மகளிருக்​கான தனி​நபர் காம்​பவுண்ட் பிரி​வில் கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா​வின் ஜோதி சுரேகா வெண்​ணம் 146-150 என்ற கணக்​கில் 14 வயதான தென் கொரி​யா​வின் கங் இயோன்​-சி​யோ​விடம் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார். அதேவேளை​யில் சிகிடா தனி​பார்த்​தி, கணேஷ் மணி ரத்​னம் ஆகியோர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர்​.

குத்துச்சண்டையில் 3 பதக்கம் உறுதி

ஆசிய விளை​யாட்​டில் மகளிருக்​கான குத்​துச்​சண்​டை​யில் 75 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் லவ்​லினா போர்​கோஹைன் 5-0 என்ற கணக்​கில் தென் கொரி​யா​வின் சியோங் சுயோனை வீழ்த்தி அரை இறு​திக்கு முன்​னேறி​னார். 60 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் பிரியா கங்​காஸ் 5-0 என்ற கணக்​கில் தஜிகிஸ்​தானின் மிஜ்கோனா சமடோ​வாவை வீழ்த்தி அரை இறு​திக்கு முன்​னேறி​னார்.

ஆடவருக்​கான 90 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் கபில் பொகாரியா 5-0 என்ற கணக்​கில் தென் கொரி​யா​வின் கிம் கிச்​சேவை வீழ்த்தி அரை இறு​திக்கு முன்​னேறி​னார். அரை இறு​திக்கு முன்​னேறியதன் வாயி​லாக இவர்​கள் 3 பேரும் குறைந்​த​பட்​சம் வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​று​வதை உறுதி செய்​துள்​ளனர்​.

ஸ்குவாஷ் கால் இறுதியில் இந்திய அணிகள்

ஆசிய விளை​யாட்​டில் ஸ்கு​வாஷ் அணி​கள் பிரி​வில் இந்​திய மகளிர் அணி 2-1 என்ற கணக்​கில் ஜப்​பானை வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது. ஜோஷ்னா சின்​னப்​பா, தன்வி கன்னா ஆகியோர் வெற்றி பெற்ற நிலை​யில் அனஹத் சிங் தோல்வி அடைந்​தார். ஆடவர் பிரி​வில் இந்​திய அணி 3-0 என்ற கணக்​கில் தென் கொரி​யாவை வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் கால் பதித்​தது. இந்​திய அணி தரப்​பில் வேல​வன் செந்​தில் குமார், அபய் சிங், வீர் சோட்​ரானி ஆகியோர் வெற்றி பெற்​றனர்​.

அவினாஷ் சேபிள் ஏமாற்றம்

ஆட​வருக்​கான 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள்​சேஸ் இறு​திப் போட்​டி​யில் நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா​வின் அவி​னாஷ் சேபிள் பந்தய தூரத்தை 8:21.67 விநாடிகளில் கடந்து 4-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார். ஜப்​பானின் ரியூஜி மியுரா (8:17.3) முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​க​மும், அவரது சகநாட்​டைச் சேர்ந்த ரியோமா அயோகி (8:17.60) 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​க​மும், கத்​தா​ரின் ஜகரியா எலகலாமி (8:18.13) 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​க​மும்​ வென்​றனர்​.

முரளி ஸ்ரீசங்​கர்

நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கருக்கு வெள்ளி

ஆட​வருக்​கான நீளம் தாண்​டு​தலில் இந்​தி​யா​வின் முரளி ஸ்ரீசங்​கர் 8.07 மீட்​டர் தாண்டி 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். அவர், தனது 2-வது வாய்ப்​பில் இந்த தூரத்தை தாண்​டி​யிருந்​தார். 4-வது வாய்ப்​பில் கூடு​தல் தூரம் தாண்ட முயன்ற போது முரளி சங்​கருக்கு கணுக்​காலில் காயம் ஏற்​பட்​டது. இதனால் அவர், கடைசி 2 வாய்ப்​பு​களை​யும் பயன்​படுத்​த​வில்​லை.

சீனா​வின் யுஹாவோ ஷி (8.17) தங்​கப் பதக்​க​மும், உஸ்​பெகிஸ்​தானின் அன்​வர் அன்​வரோவ் (8.06) வெண்​கலப் பதக்​க​மும் வென்​றனர். கேரளா​வின் பாலக்​காடை சேர்ந்த 27 வயதான முரளி சங்​கர், கடந்த 2022-ம் ஆண்டு ஹாங்​சோ​வில் நடை​பெற்ற ஆசிய விளை​யாட்டு போட்​டி​யிலும் வெள்​ளிப் பதக்​கம் கைப்​பற்​றி​யிருந்​தார்​.

ஹாக்கி அரை இறுதியில் அக்.1-ல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவர் ஹாக்​கி​யில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் நேற்று வங்​கதேசத்​துடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 10-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்​திய அணி தரப்​பில் கேப்​டன் ஹர்​மன்​பிரீத் சிங் 3 கோல்​களும் (27, 40, 45-வது நிமிடங்​கள்), லக்ரா ஷில்​லானந்த் 2 கோல்​களும் (44, 45-வது நிமிடங்​கள்), அபிஷேக் (3-வது நிமிடம்), ஜுக்​ராஜ் சிங் (22-வது நிமிடம்), சுக்​ஜீத் சிங் (32-வது நிமிடம்), சஞ்​ஜய் (59-வது நிமிடம்), மன்​தீப் சிங் (60-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர்.

லீக் சுற்​றில் 5 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்று முதலிடத்​துடன் நிறைவு செய்​துள்ள இந்​திய அணி அரை இறுதி சுற்​றில் வரும் அக்​டோபர் 1-ல் பாகிஸ்​தானுடன் மோதுகிறது. மற்​றொரு அரை இறு​தி​யில் மலேசியா - தென் கொரியா அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

குராஷில் வெண்கலம்

கு​ராஷ் தற்​காப்பு கலை விளை​யாட்​டில் மகளிருக்​கான 78 கிலோ எடைப் பிரிவு அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் பிங்கி பல்​ஹாரா 0-5 என்ற கணக்​கல் தென் கொரி​யா​வின் சுமின் மோவிடம் தோல்வி அடைந்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார்.கடந்த 2018-ம் ஆண்டு நடை​பெற்ற ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் 52 கிலோ எடைப் பிரி​வில் பிங்கி பல்​ஹாரா வெள்​ளிப் பதக்​கம் வென்​றிருந்​தார். இதன் மூலம் ஆசிய விளை​யாட்டு வரலாற்​றில் குராஷ் போட்​டி​யில் 2 பதக்​கம் வென்ற முதல் இந்​தி​யர் என்ற பெரு​மையை பெற்​றார் பிங்கி பல்​ஹா​ரா.

இறுதி சுற்றில் இந்திய அணி

4x100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தின் தகுதி சுற்றில் குரிந்தர்வீர் சிங், அபிநயா ராஜராஜன், அனிமேஷ் குஜூர், ஹரிதா பத்ரா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 41.54 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

வாலிபாலில் வெற்றி

ஆடவருக்கான வாலிபால் போட்டியில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஹாங் காங்குடன் மோதியது. இதில் இந்திய அணி 25-22, 25-19, 25-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வியட்நாமை வீழ்த்தியிருந்தது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்

ஈட்டி எறிதலில் யஷ்வீருக்கு வெள்ளி, ரோஹித்துக்கு வெண்கலம்

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவருக்​கான ஈட்டி எறிதலில் இந்​தி​யா​வின் யஷ்வீர் சிங் 85.72 மீட்​டர் தூரம் எறிந்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். மற்​றொரு இந்​திய வீர​ரான ரோஹித் யாதவ் 84.35 மீட்​டர் தூரம் எறிந்து வெண்​கலப் பதக்​கம் பெற்​றார். இலங்​கை​யின் ரமேஷ் பத்​திரகே, தனது கடைசி முயற்​சி​யில் 88.33 மீட்​டர் தூரம் எறிந்து தங்​கப் பதக்​கம் வென்​றார். ஒலிம்​பிக் சாம்​பிய​னான பாகிஸ்​தானின் அர்​ஷத் நதீம் 80.29 மீட்​டர் தூரம் எறிந்து 4-வது இடம் பிடித்​தார்​.

கிரிக்கெட்டில் அரை இறுதிக்கு இந்திய அணி முன்னேற்றம்

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவர் கிரிக்​கெட்​டில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி நேற்று கால் இறுதி ஆட்​டத்​தில் ஆப்​கானிஸ்​தானுடன் மோது​வ​தாக இருந்​தது. ஆனால் மழை காரண​மாக ஆட்​டம் கைவிடப்​பட்​டது.

எனினும் ஐசிசி தரவரிசை​யின்​படி முதலிடத்​தில் உள்ள இந்​திய அணி அரை இறுதி போட்​டிக்கு முன்​னேறியது. 10-வது இடத்​தில் உள்ள ஆப்​கானிஸ்​தான் அணி வெளி​யேறியது. அரை இறு​தி​யில் இந்​திய அணி நேபாளம் அல்​லது இலங்​கை​யுடன் மோதக்​கூடும்​.

SCROLL FOR NEXT