விளையாட்டு

1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்த இந்தியா - பனாமா கால்பந்து போட்டி

வேட்டையன்

பெங்களூரு: இந்தியா மற்றும் பனாமா அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.

இந்த ஆட்டம் பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஆட்டத்தின் முதல் பாதியின் 41-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது.

இந்திய வீரர் ரியல் வில்லியம்ஸ் அந்த கோலை பதிவு செய்தார். ஆகாஷ் மிஸ்ரா கொடுத்த பாஸை பயன்படுத்தி பந்தை வலைக்குள் செலுத்தினார் வில்லியம்ஸ். இதன் மூலம் ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஃபிபா தரவரிசையில் இந்திய அணி 138-வது இடத்திலும், பனாமா அணி 44-வது இடத்திலும் உள்ளன. இத்தகைய சூழலில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி, பனாமாவை அப்செட் செய்யுமா என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 68-வது நிமிடத்தில் பதில் கோலை பதிவு செய்தது பனாமா அணி. அந்த அணியின் வாலென்சியா அந்த கோலை பதிவு செய்தார்.

இருப்பினும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணி. இறுதியில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இந்திய அணி அடுத்ததாக பிரேசில் மற்றும் உருகுவே கால்பந்து அணிகளுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT