விளையாட்டு

மகளிர் ஹாக்கியில் இந்தியா தோல்வி

செய்திப்பிரிவு

பெர்த்: இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 4-வது ஆட்டம் நேற்று பெர்த் நகரில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் நவ்னீத் கவுர் (2-வது நிமிடம்), தீபிகா சோரங் (23-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் அபி வில்சன் (42-வது நிமிடம்), ஒலிவியா (44-வது நிமிடம்), கோர்ட்னி ஸ்கோனல் (58-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு எதிரான நட்புரீதியிலான தொடரை ஆஸ்திரேலிய அணி 2-2 என சமனில் முடித்தது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஆட்டத்தில் பெனால்டி ஷுட்அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கிலும், 3-வது ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கிலும் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது.

யு-18 ஹாக்கியில் இந்தியா வெற்றி: ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் யு-18 மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் நூஷின் 19 மற்றும் 28-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று கொரியாவுடன் மோதுகிறது.

SCROLL FOR NEXT