விளையாட்டு

யு-23 மல்யுத்தத்தில் இந்தியா தங்க வேட்டை

செய்திப்பிரிவு

டா நங்க்: வியட்​நாமின் டா நங்க் நகரில் யு-23 ஆசிய மல்​யுத்த சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான 57 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் அக் ஷய் 4-2 என்ற கணக்​கில் கஜகஸ்​தானின் எலமன் அமன்​கெல்​டியை தோற்​கடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார்.

97 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யா​வின் விக்கி 7-5 என்ற கணக்கில் உஸ்​பெகிஸ்​தானின் ஷெர்​சோத் பொயனோவ்வை வீழ்த்தி தங்​கம் வென்​றார். 53 கிலோ எடைப் பிரி​வில் இந்தியாவின் முஸ்​கான் 6-2 என்ற கணக்​கில் வியட்​நாமின் தி மைலின் நுயெனை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றார். மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யா​வின் டாப்ஸி 4-0 என்ற கணக்​கில் கஜகஸ்​தானின் அல்​டின் ஷகாயே​வாவை தோற்​கடித்து தங்க பதக்கம் வென்​றார்.

62 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யா​வின் பாக்ய 4-0 என்ற கணக்கில் கஜகஸ்​தானின் டைன்ஸ் துபேக்​கை​யும், 65 கிலோ எடைப் பிரி​வில் புல்​கிட் 4-1 என்ற கணக்​கில் மங்​கோலி​யா​வின் நார்​காஜித் நியாம்​சுரேனை​யும் வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்றார். 72 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யா​வின் அம்​ருதா 2-4 என்ற கணக்கில் மங்​கோலி​யா​வின் ஒட்​கெரல் எர்​தீன்​-ஒசிரிடம் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம் பெற்றார்.

SCROLL FOR NEXT