விளையாட்டு

இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

செய்திப்பிரிவு

மான்செஸ்டர்: இந்திய கிரிக்கெட் அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரு​கிறது.

கடந்த 1-ம் தேதி நடை​பெற்ற இவ்​விரு அணி​களிடையி​லான முதலா​வது டி20 போட்டி மழை​யின் காரண​மாக பாதியில் கைவிடப்​பட்​டது. இந்நிலையில் 2-வது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறவுள்​ளது. முதல் போட்​டி​யில் சிறப்​பாக விளை​யாடிய இந்திய அணி 7 விக்​கெட் இழப்​புக்கு 189 ரன்​கள்குவித்​தது.

இந்த ஆட்​டத்​தில் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர், அபிஷேக் சர்மா ஆகியோர் அரை சதம் விளாசினர். எனவே, இன்​றைய ஆட்டத்திலும் அவர்​களிட​மிருந்து சிறப்​பான ஆட்டம் வெளிப்​படக்கூடும்.அதே​நேரத்​தில் தொடக்க வீரர் சஞ்சு சாம்​சன் ஃபார்ம் இன்றி தவித்து வரு​கிறார். அதேபோன்று திலக் வர்மாவும் தடுமாறி வருகிறார். அணியில் இடத்தை தக்கவைக்க வேண்டுமென்றால் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

SCROLL FOR NEXT