விளையாட்டு

இந்தியா - ஆஸி. ஏ அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் செப்.22-ல் புதுச்சேரியில் தொடக்கம்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஆஸ்திரேலியா ஏ அணியும், இந்தியா ஏ அணியும் பங்கேற்கும் நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியை புதுச்சேரியில் நடத்த கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்தது.

புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள சிஏபி மைதானத்தில் வரும் 22-ம் தேதி இதற்கான போட்டிகள் தொடங்குகிறது. 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் அக்டோபர் 11-ம் தேதி வரை நடக்கிறது. போட்டிகளில் பங்கேற்க ஆஸ்திரேலியா அணி புதுச்சேரிக்கு வந்துள்ளது. இந்த அணியினர் கிரிக்கெட் மைதானத்தில் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்திய அணி வீரர்கள் புதுச்சேரி வந்து நாளை முதல் பயிற்சி மேற்கொள்கின்றனர். இந்தியா, ஆஸ்திரேலியா ஏ அணிகள் புதுவையில் நடப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT