விளையாட்டு

அதிரடி​யாக விளையாடினால் முதல் 6 ஓவரிலேயே போட்டியை வெல்ல சஞ்சு சாம்சனால் முடியும்: கவுதம் கம்பீர் புகழாரம்

செய்திப்பிரிவு

மும்பை: சஞ்சு சாம்​சன் அதிரடி​யாக விளை​யாடி​னால், அவரால் ஆட்​டத்​தின் முதல் 6 ஓவர்​களி​லேயே போட்​டியை வென்று கொடுக்க முடி​யும் என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்பீர் பாராட்டு தெரி​வித்​தார்.

கடந்த 8-ம் தேதி நடை​பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்​டி​யில் இந்​திய அணி, நியூஸிலாந்தை வென்று கோப்​பையைக் கைப்​பற்​றியது. 3-வது முறை​யாக டி20 உலகக் கோப்​பையை வென்று சாதனை படைத்​திருந்​தது.

டி20 உலகக் கோப்​பை​யின் கடைசி 3 போட்​டிகளில் இந்​திய தொடக்க வீரர் சஞ்சு சாம்​சன் அதிரடி​யாக விளை​யாடி அரை சதங்​களை விளாசி​னார். முக்​கிய​மான போட்​டிகளில் சிறப்​பாக செயல்​பட்டு ரன்​கள் குவித்த சஞ்சு சாம்​சனுக்கு தொடர் நாயகன் விருது வழங்​கப்​பட்​டது.

          

இந்​நிலை​யில், சஞ்சு சாம்​சனை, கவுதம் கம்​பீர் பாராட்​டிப் பேசி​யுள்​ளார். இது தொடர்​பாக ஜியோஹாட்​ஸ்​டாருக்கு அளித்த பேட்​டி​யில் கவுதம் கம்​பீர் கூறிய​தாவது: தொடக்க ஆட்​டக்​காரர் சஞ்சு சாம்​சன் மிக​வும் திறமை வாய்ந்​தவர். அதிரடி ஆட்​டத்​தால், ஆட்​டத்​தின் போக்​கையை மாற்​றக்​கூடிய​வர். சஞ்சு சாம்​ச​னால் என்ன செய்ய முடி​யும் என்​பது நமக்​குத் தெரி​யும். அவரது திறமை மீது ஒரு​போதும் எனக்கு எந்​த வொரு சந்​தேக​மும் இருந்​த​தில்​லை.

அவர் அதிரடி​யாக விளை​யாடி​னால், அவரால் ஆட்​டத்​தின் முதல் 6 ஓவரிலேயே போட்​டியை வென்று கொடுக்க முடி​யும். அந்த அளவுக்கு அசாத்​திய திறமை​யை​யும், மன உறு​தி​யை​யும் படைத்​தவர் அவர். உடற்​ப​யிற்சி கூடத்​தில் நாங்​கள் இரு​வரும் ஒன்​றாக பயிற்சி மேற்​கொள்​வோம். அப்​போது, ஜிம்​பாப்​வேவுக்கு எதி​ரான போட்​டி​யில் நீங்​கள் விளை​யாடு​கிறீர்​கள் என்​பதை சஞ்சு சாம்​சனிடம் கூறினேன்.

எங்​களுக்கு இடையே​யான உரை​யாடல் இவ்​வாறு​தான் இருக்​கும். டாப் ஆர்​டரில் மூன்று இடதுகை பேட்​ஸ்​மேன்​கள் இருக்​கிறார்​கள் என்​பது குறித்து நிறைய விமர்​சனங்​கள் இருந்​தது எனக்​குத் தெரி​யும். ஆனால், டாப் ஆர்​டரில் 3 இடதுகை பேட்​ஸ்​மேன்​கள் இருப்​ப​தால் அணி​யில் மாற்​றம் செய்​ய​வில்​லை.

சஞ்சு சாம்​சன், அபிஷேக் சர்​மா, இஷான் கிஷானை தொடர்ந்து சூர்​யகு​மார் யாதவ், ஹர்​திக் பாண்​டி​யா, திலக் வர்​மா, ஷிவம் துபே, அக்​சர் படேல் என பேட்​டிங் வரிசை பலமாக இருப்​ப​தால் நமக்கு அதிக வாய்ப்பு இருந்​தது. அதிரடி​யாக விளை​யாடக் கூடிய பார்ட்​னர்​ஷிப் அமைய​வேண்​டும் என்​ப​தற்​காகவே டாப் ஆர்​டரில் மாற்​றம் செய்​தோம். முதல் 6 ஓவர்​களில் அதிரடி​யாக விளை​யாட வேண்​டும் என்​ப​தற்​காகவே சஞ்சு சாம்​சன் பிளே​யிங் லெவனில் சேர்க்​கப்​பட்​டார்.

டி20 உலகக் கோப்​பை​யில் அவரது கடைசி 3 போட்​டிகளி​லும் திறமை​யாக செயல்​பட்டு ரன்​களைக் குவித்​தார். உலகக் கோப்​பையை வென்​றதற்கு சஞ்​சு​வின் ஆட்​டம் முக்​கிய​மான காரணி​களில் ஒன்​றாக அமைந்​தது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் கடைசி மூன்று ஆட்​டங்​களில் சஞ்சு சாம்​சன் 97*, 89, 89 ரன்​கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

‘அபிஷேக் சர்மா அவுட் ஆஃப் பார்​மில் இல்​லை’

அபிஷேக் சர்மா குறித்து கவுதம் கம்பீர் கூறிய​தாவது: நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் முதல் 3 ஆட்​டங்​களில் அபிஷேக் சர்மா தொடர்ச்​சி​யாக ரன் எடுக்​காமலேயே ஆட்​ட​மிழந்​தார். ஆனால் ஜிம்​பாப்​வேவுக்கு எதி​ரான போட்​டி​யில் அரை சதம் விளாசி​னார்.

அதற்​கடுத்த போட்​டி​யில் அவர் குறைந்த ரன்​களில் வீழ்ந்​தார். இருந்​த​போதும், இறு​திப் போட்​டி​யில் அவர் தனது பழைய அதிரடி ஆட்​டத்​துக்​குத் திரும்​பி​யிருந்​தார். அவர் அவுட் ஆஃப் பார்​மில் இல்​லை. அவருக்கு ரன்​கள் கிடைக்​க​வில்லை என்​பது​தான் உண்​மை. அவ்​வளவு​தான். ஒவ்​வொரு கிரிக்​கெட் வீரருக்​கும் தங்​களது வாழ்​வில் இது​போன்று தொடர்ச்​சி​யாக ரன் எடுக்​காமல் அவுட்​டாகும் நிலை வரும்.

அது​போன்ற நிலை​தான் அபிஷேக் சர்​மாவுக்​கும் ஏற்​பட்​டுள்​ளது. இதே​போன்ற நிலைமை 2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்​டி​யின்​போது எனக்கு ஏற்​பட்​டது. தொடர்ச்​சி​யாக 3 முறை 0 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தேன். ஆனால் கவலைப்​பட​வில்​லை. அடுத்த ஆட்​டங்​களில் எனது ஆட்​ட​முறையை மாற்​றிக்​கொண்டு ரன்​களைக் குவித்​தேன்.

இந்த சம்​பவத்தை அபிஷேக் சர்​மா​விடம் தெரி​வித்து பயப்​ப​டா​மல் விளை​யாடு​மாறு கூறினேன். இறு​திப் போட்​டி​யில் அபிஷேக் சர்மா அதை சரி​யாகச் செய்​தார். அவர் மீது அணி வீரர்​கள், குழு​வினர் என அனை​வரும் நம்​பிக்கை வைத்​திருந்​தோம். அதை அவர் பொய்​யாக்​க​வில்​லை. இவ்வாறு கவுதம் கம்​பீர் பேசி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT