வைபவ் சூர்​ய​வன்​ஷி

 
விளையாட்டு

​யு-19 உலகக் கோப்பை இன்று தொடக்​கம்: இந்​தியா - அமெரிக்கா பலப்​பரீட்சை

செய்திப்பிரிவு

புல​வாயோ: ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் ஜிம்​பாப்வே மற்​றும் நமீபி​யா​வில் இன்று (15-ம் தேதி) தொடங்​கு​கிறது. வரும் பிப்​ர​வரி 6-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தத் தொடரில் 16 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இவை 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. இந்​தியா யு-19 அணி ‘பி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது.

இதே பிரி​வில் அமெரிக்​கா, வங்​கதேசம், நியூஸிலாந்து அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. 5 முறை சாம்​பிய​னான இந்​தியா யு-19 அணி தனது முதல் ஆட்​டத்​தில் இன்று (15-ம் தேதி) அமெரிக்கா​வுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் பிற்​பகல் 1 மணிக்கு ஜிம்​பாப்​வே​யின் புல​வாயோ நகரில் நடை​பெறுகிறது.

சர்​வ​தேச கிரிக்​கெட்​டில் நுழைவதற்கு யு-19 உலகக் கோப்பை தொடர் முதற்​படி​யாக அமைந்​துள்​ள​தால் இளம் வீரர்​களுக்கு இந்த போட்டி முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக கருதப்​படு​கிறது. இளம் இந்​திய அணி ஆயுஷ் மாத்ரே தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. 2000, 2008, 2012, 2022, 2018-ம் ஆண்​டு​களில் சாம்​பியன் பட்​டம் வென்​றுள்ள இந்​திய அணி 6-வது முறை​யாக கோப்​பையை வெல்​லும் முனைப்​புடன் களமிறங்​கு​கிறது.

கடந்த 2024-ம் ஆண்டு நடை​பெற்ற தொடரின் இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி, ஆஸ்​திரேலி​யா​விடம் தோல்வி அடைந்து கோப்​பையை வெல்​லும் வாய்ப்பை தவற​விட்டு இருந்​தது. எனினும் இம்​முறை இளம் இந்​திய அணி சிறந்த பார்​மில் உள்​ளது. இந்​திய யு-19 அணி கடைசி​யாக விளை​யாடிய 16 ஆட்​டங்​களில் 13-ல் வெற்றி கண்​டுள்​ளது. இங்​கிலாந்​து, ஆஸ்​திரேலி​யா, தென் ஆப்​பிரிக்கா அணி​களுக்கு எதி​ராக பெற்ற வெற்​றிகளும் இதில் அடங்​கும்.

பேட்​டிங்​கில் வைபவ் சூர்​ய​வன்​ஷி, ஆயுஷ் மாத்​ரே, விஹான் மல்​கோத்​ரா, ஆரோன் ஜார்​ஜ், அபிக்​யான் குண்டு ஆகியோர் நம்​பிக்கை அளிக்​கக்​ கூடிய​வர்​களாக திகழ்​கின்​றனர். பந்​து​வீச்​சில் தீபேஷ் தேவேந்​திரன், ஆர்​.எஸ்​.அம்ப்​ரிஷ், கிஷான் சிங், ஹனில் படேல் ஆகியோர் அமெரிக்க பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும். அமெரிக்க அணி உத்​கர்ஷ் வஸ்​த​வா தலை​மையில் களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT