விளையாட்டு

ஜெயசூரியா மீது ஐசிசி நடவடிக்கை

செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கை - இந்தியா அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 2-வது நாளான நேற்று முன்​தினம் இலங்கை அணி பேட் செய்த போது போதிய வெளிச்​சம் இல்​லாத​தால் ஆட்​டத்தை நிறுத்த வேண்​டும் என்று அந்த அணி​யின் பேட்​ஸ்​மேன்​களான கமில் மிஷா​ரா, பிரபாத் ஜெயசூரியா ஆகியோர் நடு​வர்​களிடம் முறையிட்​டனர்.

ஆனால் கள நடு​வர்​களான அஹ்சன் ரஸா மற்​றும் ஷர்ஃ​போத் துல்லா சைகத் இரு​வரும் வெளிச்​சத்​தின் அளவை கணக்​கிட்​டு, இந்​திய அணி சுழற்​பந்து வீச்​சாளர்​களைப் பயன்​படுத்​தி​னால் ஆட்​டத்​தைத் தொடரலாம் என தெரி​வித்​தனர்​.

இதையடுத்து தொடர்ந்து விளை​யாடிய பிர​பாத் ஜெயசூரியா 2 ரன்​களில் மானவ் சுதர் பந்​தில் விக்​கெட்டை பறி​கொடுத்​தார். ஆட்ட​மிழந்​ததும் பிர​பாத் ஜெயசூரியா தனது கையுறை​களை ஓய்​வறை​யில் வீசி நடு​வர்​கள் மீது அதிருப்​தியை வெளிப்படுத்தியிருந்தார்.

இதுதொடர்​பான வீடியோ சமூக வலை​தளத்​தில் வைரலானது. இந்​நிலை​யில் இந்த விவ​காரம் தொடர்​பாக விசா​ரித்த ஐசிசி, பிர​பாத் ஜெயசூரி​யாவுக்கு ஒரு தகு​தி​யிழப்பு புள்​ளியை அப​ராத​மாக விதித்​து உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT