2026 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி கோப்பையை வென்றதில் டிம் டேவிட்டின் பினிஷிங் பங்களிப்புகள் நினைவிருக்கலாம். நேற்று மீண்டும் ஒரு அதிரடி பினிஷிங் இன்னிங்ஸை ஆடி ஆர்சிபி ரன் இலக்கை சிஎஸ்கேவிடமிருந்து வெகுதூரம் நகர்த்திச் சென்று விட்டார் டிம் டேவிட்.
2026 தொடரில் 46 இன்னிங்ஸ்களில் 94 சிக்சர்களை அடித்து நொறுக்கி 6-வது இடத்தில் இருந்தார் டிம் டேவிட். நேற்று 8 சிக்சர்களையும் 3 பவுண்டரிகளையும் விளாசினார். இந்நிலையில் தன்னுடைய இந்த எழுச்சிக்குக் காரணமாக தினேஷ் கார்த்திக்குடன் பணியாற்றியதைக் கூறுகிறார் டிம் டேவிட்.
“நாங்கள் நிறைய தயாரிப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். தினேஷ் கார்த்திக்குடன் பணியாற்றுவது என் அதிர்ஷ்டம்தான். இத்தகைய சூழ்நிலைகளில் தினேஷ் கார்த்திக் உண்மையிலேயே பெரிய அனுபவசாலிதான், அவரிடமிருந்து கற்பதற்கு நிறைய இருக்கின்றன. நாங்கள் இருவரும் பல்வேறுபட்ட உத்திகளை விவாதித்து அதில் நான் பயிற்சி பெற்று வருகிறேன்.
எப்போதும் அடிப்படைகள் வலுவாக இருந்தால், அதன் மீது நாம் மேலும் வலுவடைந்து கொண்டே செல்ல முடியும். ஐபிஎல் தொடரில் இப்போது சில ஆண்டுகளாக ஆடி, சொந்த அனுபவமும் கைகூடியுள்ளது. தயாரிப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில் ஆட்டத்திறனை வெளிப்படுத்துவதில் நம் மீதே நாம் அழுத்தமேற்றிக் கொள்ள வேண்டியத் தேவையில்லை.
சில நல்ல நாட்களில் நான் மகிழ்ச்சியுடன் ஆடுகிறோம், ஆனால் உண்மையில் சில மோசமான நாட்களும் வரும். ஆனால் ஹை ரிஸ்க் ஆட்டத்தை ஆடும்போது அப்படி நேரவும் கூடும். அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடும்போது இவை சகஜம். ” என்றார்.