விளையாட்டு

மே.இ.தீவுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது எப்படி? - மனம் திறக்கும் சஞ்சு சாம்சன்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதிரான சூப்​பர் 8 சுற்று ஆட்​டத்​தில் 196 ரன்​கள் இலக்கை விரட்​டிய நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி 19.2 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 199 ரன்​கள் எடுத்து அபார வெற்றி பெற்​றது.

இந்த வெற்​றி​யின் மூலம் குரூப் 1-ல் 4 புள்​ளி​களு​டன் 2-வது இடம் பிடித்து அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது இந்திய அணி. தொடக்க வீர​ரான சஞ்சு சாம்​சன் 40 பந்துகளில், 4 சிக்​ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் 97* ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றில் முக்​கிய பங்​கு​வகித்​தார்.

          

அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய கேப்​டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்​களும், திலக் வர்மா 27 ரன்​களும் சேர்த்​தனர். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்​திய அணி, தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக பெரிய அளவில் தோல்​வியை சந்​தித்த பின்​னரே டாப் ஆர்​டர் பேட்​டிங்கை மாற்றி அமைக்​கும் வகை​யில் 31 வயதான சாம்​சனுக்கு வாய்ப்பு வழங்​கப்​பட்​டது. அவரும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்​படுத்தி இந்​திய அணி அரை இறு​திக்கு முன்னேறு​வதற்கு உறு​துணை​யாக இருந்​தார்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் சஞ்சு சாம்​சன் கூறிய​தாவது: ஷாட்​களை தேர்வு செய்து விளை​யாடு​வ​தில் கவனம் செலுத்​தி​யிருந்​தேன். எனது பேட்​டிங்​கில் அதிக அளவில் மாற்​றம் செய்ய நான் விரும்​ப​வில்​லை. ஏனெனில் இதே பாணி​யில் விளை​யாடி​தான் சிறந்த செயல் திறனை வெளிப்​படுத்தி இருந்​தேன் என்​பதை நான் அறிவேன்.

அதனால் நான் என்​னையே நம்​பினேன். செல்​போனை சுவிட்ச் ஆஃப் செய்​தேன், சமூக வலை​தளங்​கள் பக்​கம் செல்​ல​வில்​லை. எனது சொந்த கருத்​துகளை நானே கேட்டேன். சிறப்பு வாய்ந்த ஆட்​டத்​தில் நன்​றாக விளையாடியது மகிழ்ச்​சி​யாக உள்​ளது.

சேஸிங் சற்று கடின​மாக இருந்​தது. நமது பேட்​டிங் பலம் மற்​றும் பனிப்​பொழி​வால் ஈடன் கார்​டன் மைதானத்​தில் 190-க்​கும் மேலான இலக்கை துரத்​து​வது கொஞ்​சம் எளிதாக இருக்​கும் என்று நினைத்​தேன். ஆனால், தொடர்ந்து விக்​கெட்​டு​களை இழந்​த​தால் அது சவாலாக மாறியது.

உண்​மை​யைச் சொல்​லப் போனால், என்​னுடைய அனுபவம் பெரிய அளவில் பங்​காற்​றியது. எனக்கு நல்ல தொடக்​கம் கிடைத்​தது, ஆனால் விக்​கெட்​டு​கள் தொடர்ந்து விழுந்​த​போது, ஆட்​டத்தை சிறப்​பாக முடிக்​கும் வகை​யில் கடைசி தருணம் வரை எடுத்​துச் செல்ல வேண்டும் என்று உணர்ந்​தேன்.

பொது​வாக வீரர்​கள் இதைச் செய்ய விரும்​பு​வார்​கள். ஆனால் அது எல்லா நேரத்​தி​லும் நடக்​காது, எனவே இந்த ஆட்​டத்​தில் அது நடந்​ததற்கு நான் மிக​வும் நன்றியுள்ளவனாக இருப்​பேன். அழுத்​த​மான ஆட்​டத்​தில் இது​போன்ற ஒரு ஸ்கோரைத் துரத்​தும்​போது, ரிஸ்க் எடுத்து விளை​யாடும் ஷாட்​களை தேர்வு செய்​வதற்கு பதிலாக அதிக பவுண்​டரி​களை விரட்ட வேண்​டும்.

நம்​முடைய மனித இயல்பு என்​னவென்​றால், நாம் பல நேரங்​களில் ‘நான் இதை செய்ய முடி​யு​மா? முடி​யாது போலிருக்​கிறதே’ என்பது போன்ற எதிர்​மறை எண்ணத்திலிருந்து தொடங்​கு​வோம். எனக்​கும் இந்த எண்ணங்​கள் இருந்​தன. ஆனால் இவற்றை நேர்​மறை​யாக மாற்ற நான் முயற்சி செய்​தேன்.

நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான இருதரப்பு தொடரில் சிறப்​பாக செயல்​பட்டு உலகக் கோப்​பைக்​கான இந்​திய அணி​யில் அங்​கம் வகிக்க விரும்​பினேன். ஆனால் அது நடை​பெற​வில்​லை. எனினும் அதிர்​ஷ்ட​வச​மாக 10 நாட்​கள் இடைவெளி கிடைத்​தது.

எந்​தப் போட்​டி​யிலும் விளை​யாட​வில்​லை. அணி​யிலும் இடம்​பெற​வில்​லை. இன்​னும் என்ன இருக்​கிறது? ஏன் இது வேலை செய்​ய​வில்​லை? இன்​னும் என்ன செய்ய வேண்டும்?’ என ஆத்​மார்த்​த​மாக சிந்​தித்​தேன். அடிப்​படை விஷ​யங்​களில் கவனம் செலுத்​தினேன். என்னை எப்​படி தயார் செய்து கொள்ள வேண்​டும் என்​ப​தை​யும் மேம்படுத்திக் கொண்​டு, மீண்​டும் திரும்பி வந்​தேன். பலரிட​மிருந்து ஆலோ​சனை​கள் வந்​தன.

அதில் சரி​யான கருத்​துகளும் இருந்​தன. ஆனால் அதே சமயம், ‘சஞ்​சு, நீ இதே முறை​யில் விளை​யாடி​தான் மூன்று சர்​வ​தேச சதங்​கள் அடித்​திருக்​கிறாய்’ என்ற எண்​ண​மும் எனக்​குள் இருந்​தது.

இந்​தி​யா​வில் நூற்​றுக்​கும் மேற்​பட்ட கிரிக்​கெட் வீரர்​கள் இது போன்ற ஒரு நாளைப் பற்றி கனவு காண்​கிறார்​கள். நானும் கனவு காணத் துணிந்​தேன். கேரளா​வின் திரு​வனந்​த​புரத்​தைச் சேர்ந்த ஒரு இளைஞ​னாக நாட்​டுக்​காக முக்கிய​மான போட்​டி​யில் வெல்​வது பற்​றி கனவு கண்டேன்​. அது தற்​போது நிகழ்ந்​துள்​ளது. இவ்​வாறு சஞ்​சு ​சாம்​சன்​ கூறினார்.

SCROLL FOR NEXT