நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வுக்குப் பிறகான போர்ச்சுகல் அணி நேஷன்ஸ் லீக் கால்பந்தில் தங்கள் சொந்த மண்ணில் டென்மார்க் அணிக்கு எதிராக வரலாறு காணாத 4-1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி கண்டது.
டென்மார்க் அணிக்காக பியர் எமில் ஹோய்பெர்க் பெனால்டி மூலம் 43வது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க ராஸ்மஸ் ஹோய்லண்ட் 50 மற்றும் 57வது நிமிடங்களில் 2 கோல்களைத் திணிக்க 75வது நிமிடத்தில் ஜோக்கிம் ஆண்டர்சன் 4வது கோலை அடித்து போர்ச்சுகல் அணிக்கு ஆணியறைந்தார். போர்ச்சுகல் அணிக்காக 90+4-வது நிமிடத்தில் பெர்னார்டோ சில்வா ஒரு ஆறுதல் கோலைத்தான் அடிக்க முடிந்தது.
போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த வாரம் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 41 வயதான ரொனால்டோ அணியில் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தியதா என்று பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “இப்போது அவர் தேசிய அணிக்காக விளையாடவில்லை என்றால், அவரை இழந்துவிட்டோம் என்று எதைச் சொல்வது? எனக்குத் துணையாக இருக்க ஒருவர் தேவைப்பட்டால் மட்டுமே அவரை நினைக்க முடியும். அவர் இனி விளையாடுவதில்லை; அணியிலும் இல்லை. தனது நிலைப்பாட்டை அவரே முடிவு செய்துவிட்டார்” என்று பதிலளித்தார்.
இதற்கிடையே, ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக ரொனால்டோவின் முன்னாள் அணித் தோழர்கள் அனைவரும் அவரது 7-ம் எண் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து அவருக்கு மரியாதை செலுத்தினர். ஆனால், ஆட்டத்தில் அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.
ஆட்டத்தின் முதல் பாதி முடிவடைவதற்கு முன்பாக, போர்ச்சுகல் வீரர் ரூபன் டயஸ் பந்தை கையால் தடுத்ததால் டென்மார்க் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை அந்த அணியின் கேப்டன் பியர் - எமில் ஹோய்பெர்க் கோலாக மாற்றினார்.
தொடர்ந்து இரண்டாவது பாதியின் 50-வது நிமிடத்தில் ராஸ்மஸ் ஹோய்லுண்ட் அற்புதமான வாலி ஷாட் மூலம் கோல் அடித்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். 57-வது நிமிடத்தில் இவர் மீண்டும் ரூபன் டயஸைத் தாண்டிச் சென்று, கோல்கீப்பர் டியோகோ கோஸ்டாவை ஏமாற்றி மீண்டும் கோல் அடித்தார்.
ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் ஜோக்கிம் ஆண்டர்சன் தலையால் முட்டி கோல் அடிக்க, டென்மார்க் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதற்கிடையே, மைதானத்தில் இருந்த சொந்த அணி ரசிகர்கள் ரொனால்டோவின் பெயரை முழக்கமிட்டு அவரை நினைவுகூர்ந்தனர்.
போர்ச்சுகல் அணி இதற்கு முன்பு சொந்த மண்ணில் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கோல்கள் வித்தியாசத்தில் வெறும் நான்கு முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
கடைசியாக 1993-ம் ஆண்டு உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் இத்தாலிக்கு எதிராக இதுபோன்ற தோல்வியைச் சந்தித்திருந்தது. தற்போது டென்மார்க்கிடம் அடைந்துள்ள இந்தப் படுதோல்வி, அந்த அணிக்கு மேலும் ஒரு மோசமான ஆட்டமாக அமைந்துள்ளது.