ஹம்பர்க்: ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஹம்பர்க் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ரானி, போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் பாப்டிஸ்ட் மசோட்டியுடன் மோதினார்.
69 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாப்டிஸ்ட் மசோட்டி 12-10, 9-11, 14-12, 9-11, 11-6 என்ற செட் கணக்கில் வீர் சோட்ரானியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.