விளையாட்டு

நார்வே செஸ் போட்டி: குகேஷ், பிரக்ஞானந்தா முதல் சுற்றில் வெற்றி

செய்திப்பிரிவு

ஒஸ்லோ: நார்வே நாட்​டில் உள்ள ஒஸ்லோ நகரில் நார்வே செஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது.

இதில் முதல் சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​டரும் உலக சாம்​பியனு​மான டி.குகேஷ், ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமருடன் மோதி​னார். 5 மணி நேரம் நடை​பெற்ற இந்த ஆட்​டம் 144-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. இதைத் தொடர்​நது நடை​பெற்ற ஆர்​மகெ​டான் சுற்​றில் குகேஷ் வெற்றி பெற்​றார். இதன் மூலம் அவர், 1.5 புள்​ளி​களை பெற்​றார்.

மற்​றொரு இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான இந்​தி​யா​வின் ஆர்.பிரக்ஞானந்தா, அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான வெஸ்லி சோவுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் 32-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. இதைத் தொடர்ந்து நடை​பெற்ற ஆர்​மகெ​டான் சுற்​றில் பிரக்​ஞானந்தா வெற்றி பெற்று 1.5 புள்​ளி​களை பெற்​றார். உலகின் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்​பியனு​மான நார்​வே​யின் மேக்​னஸ் கார்ல்​சன், பிரான்​ஸின் அலிரேசா ஃபிரோஸ்​ஜாவுடன் மோதினார்.

இதில் கார்ல்​சன் 38-வது நகர்த்​தலின் போது தோல்வி அடைந்​தார். 10 சுற்​றுகள் கொண்ட இந்த தொடரில் அலிரேசா ஃபிரோஸ்ஜா 3 புள்​ளிளு​டன் முதலிடத்​தில் உள்​ளார். குகேஷ், பிரக்​ஞானந்தா தலா 1.5 புள்​ளி​களு​டன் அடுத்த இடங்​களில் உள்​ளனர். வெஸ்லி சோ, வின்​சென்ட் கீமர் ஆகியோர் தலா ஒரு புள்​ளி​களை பெற்​றனர். கார்ல்​சன் இன்​னும் புள்​ளி​க் கணக்​கை தொடங்கவில்லை.

SCROLL FOR NEXT