விளையாட்டு

“குஜ​ராத் அணி ஆடு​களத்​தை சிறப்பாக கையாண்​டது” - ஹைதராபாத் அணி​ பயிற்சியாளர் வெட்டோரி பாராட்டு

செய்திப்பிரிவு

அகம​தா​பாத்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் அகமதாபாத்தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்கடித்தது குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த குஜ​ராத் அணி 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 168 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக சாய் சுதர்​சன் 61, வாஷிங்​டன் சுந்​தர் 50 ரன்​கள் சேர்த்​தனர்.

169 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஹைத​ரா​பாத் அணி​யானது குஜ​ராத் அணி​யின் வேகப்​பந்து வீச்சை தாக்​குப்​பிடிக்க முடியாமல் 14.5 ஓவர்​களில் 86 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதிகபட்​ச​மாக பாட் கம்​மின்ஸ் 19, சலில் அரோரா 16, ஹென்​ரிச் கிளாசன் 14, இஷான் கிஷன் 11 ரன்​கள் சேர்த்​தனர். டிரா​விஸ் ஹெட் 0, அபிஷேக் சர்மா 6 ரன்​களில் நடையை கட்​டினர். குஜ​ராத் அணி தரப்​பில் காகிசோ ரபா​டா, ஜேசன் ஹோல்​டர் ஆகியோர் தலா 3 விகெட்​களை வீழ்த்​தினர்.

பிரசித் கிருஷ்ணா 2 விக்​கெட்​களை​யும் முகமது சிராஜ், ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர். குஜராத் அணிக்கு இது 8-வது வெற்​றி​யாக அமைந்​தது. 12 ஆட்டங்களில் விளை​யாடி உள்ள அந்த அணி 8 வெற்​றி, 4 தோல்விகளு​டன் 16 புள்​ளி​களை குவித்து முதலிடத்​தில் உள்​ளது. அதேவேளை​யில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணிக்கு இது 5-வது தோல்​வி​யாக அமைந்​தது. அந்த அணி 12 ஆட்​டங்​களில் விளையாடி 7 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 14 புள்​ளி​கள் சேர்த்து 3-வது இடத்​தில் உள்​ளது.

குஜ​ராத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான டேனியல் வெட்டோரி கூறிய​தாவது: குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யினர் மிகச்​சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்​தி​னார்​கள். பந்​து​வீச்​சில் அவர்கள் எங்​களுக்கு அதிக அழுத்​தத்​தைக் கொடுத்​தனர். அதேவேளை​யில் பேட்​டிங்​கின் போது அவர்​களு​டைய தொடக்க வீரர்​கள் சிறந்த அடித்​தளத்தை அமைத்​துக் கொடுத்​தனர். ஆட்​டத்​தின் பாதி​யில் நாங்​கள் திருப்​தி​யாகவே இருந்​தோம், எனினும் அவர்​களு​டைய பந்​து​வீச்சு வரிசையை எதிர்​கொள்​வது கடினம் என்​பதை நாங்​கள் அறிந்​திருந்​தோம்.

4 வேகப்​பந்து வீச்​சாளர்​களு​டன் ரஷித் கானும் இணை​யும்​போது, அது எப்​போதுமே சவாலான ஒன்​றாகத்​தான் இருக்​கும். பேட்டிங்கில் நாங்​கள் எதிர்​பார்த்த சிறப்​பான தொடக்​கம் எங்களுக்கு அமைய​வில்​லை, அதை அவர்​கள் சாதக​மாகப் பயன்​படுத்​திக்​கொண்​டார்​கள். அவர்​களு​டைய பந்​து​வீச்​சும் அபார​மாக இருந்​தது. குஜ​ராத் டைட்​டன்ஸ் பலமான அணி, அவர்​களுக்​கென்று ஒரு தனித்​து​வ​மான பாணி உள்​ளது. தேவைப்​படும்​போது அதற்​கேற்ப தங்​களை மாற்​றிக்​கொள்​ளும் திறமை அவர்​களிடம் உள்​ளது. அந்த வகை​யில், ஆடு​களத்​தின் சூழலை அவர்​கள் மிகச்​சிறப்​பாகக் கையாண்​டார்​கள்.

இந்​தச் சூழலுக்கு அவர்​கள் மிக​வும் பொருத்​த​மானவர்​கள். எங்களைப் பொறுத்​தவரை, அவர்​களு​டைய பந்​து​வீச்சு வரிசையை எதிர்​கொள்​வது​தான் முக்​கிய சவாலாக இருந்​தது. இலக்கு 169 ரன்​கள் என்​ற​போது எங்​களுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாகவே நாங்​கள் கரு​தினோம். இதற்​காக நான் பேட்​டிங் வரிசையை எந்​த​விதத்​தி​லும் குறை சொல்ல மாட்​டேன், இந்த சீசனில் அவர்​கள் மிகச்​சிறப்​பாகச் செயல்​பட்​டுள்​ளனர். ஐபிஎல் தொடரில் உள்ள ஒவ்​வொரு அணிக்​கும் அவ்​வப்​போது சில சிறிய பின்​னடைவு​கள் ஏற்​படத்​தான் செய்​யும். எங்​களுக்கு அது தற்​போது நிகழ்ந்​துள்​ளது.

இதிலிருந்து மீண்டு வந்து எங்​களால் மீண்​டும் பலமாகத் திரும்ப முடி​யாது என்​ப​தற்கு எந்​தக் காரண​மும் இருப்​ப​தாக எனக்​குத் தெரிய​வில்​லை. எங்​களு​டைய பந்​து​வீச்​சாளர்​கள் எப்​போதுமே குறையே இல்​லாமல் செயல்பட வேண்​டும் என்று நாங்​கள் எதிர்​பார்க்​க​வில்​லை. ஐபிஎல் தொடரில் தற்​போது நில​வும் சூழலில் பந்து​வீசுவது என்​பது மிக​வும் கடின​மான காரி​யம். குஜ​ராத் டைட்டன்​ஸ் அணியை 170 ரன்​களுக்​குள் கட்​டுப்​படுத்​தி​யது ஒரு மிகச்​சிறந்​த பணி​யாகும்​. இவ்​வாறு டேனியல் வெட்டோரி கூறினார்.

SCROLL FOR NEXT