ஜெர்மனி நாட்டின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ்

 
விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார் ஸ்வெரேவ்

வேட்டையன்

நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் பட்டம் வென்றார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் மற்றும் உலக தரவரிசையில் தற்போது 4-வது இடத்திலுள்ள அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் விளையாடினர்.

கடந்த 2003-ல் அமெரிக்காவின் ஆன்டி ராடிக் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்றிருந்தார். அந்த வகையில் இம்முறை இறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீரர் பென் ஷெல்டன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், அவர் ஸ்வெரேவ் உடன் பலப்பரீட்சை மேற்கொண்டார்.

சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் 6-3, 7-6(2), 5-7 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவ் வெற்றி பெற்றார். நடப்பு ஆண்டில் அவர் வெல்லும் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது. முன்னதாக, பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலும் அவர் பட்டம் வென்றிருந்தார். அது அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

29 வயதான ஸ்வெரேவ், இதற்கு முன்பு கடந்த 2020-ல் அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். இந்நிலையில், இந்த முறை அவர் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.

SCROLL FOR NEXT