ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான டேவிட் பெய்ன் கணுக்கால் காயம் காரணமாக விலகியிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜெரால்ட் கோட்ஸியை ரூ.2 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜெரால்ட் கோட்ஸி கடந்த 2024-ம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2025-ம் ஆண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் விளையாடி இருந்தார். இந்த இரு அணிகளுக்கும் 14 ஆட்டங்களில் விளையாடியிருந்த அவர், 15 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.