விளையாட்டு

காலே டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் இலக்கு: 4 விக்கெட்களை இழந்து இலங்கை அணி திணறல்

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

காலே: இலங்கை - இந்​தியா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்​வ​தேச மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 462 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக தேவ்​தத் படிக்​கல் 167, கே.எல்​.​ராகுல் 82, துருவ் ஜூரெல் 51 ரன்​கள் விளாசினர். அதேவேளை​யில் இலங்கை அணி 79.4 ஓவர்​களில் 284 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக சோனல் தினுஷா 100, நிரோஷன் திக்​வெல்லா 80 ரன்​கள் சேர்த்​தனர்.

178 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி நேற்​றைய 4-வது நாள் ஆட்​டத்​தில் 48.5 ஓவர்​களில் 193 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ரிஷப் பந்த் 69 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 66 ரன்​கள் விளாசி​னார். இது அவருக்கு 20-வது அரை சதத​மாக அமைந்​தது. தேவ்​தத் படிக்​கல் 75 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 44 ரன்​களும், கே.எல்​.​ராகுல் 47 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 35 ரன்​களும் சேர்த்​தனர்.

மற்ற எந்த பேட்​ஸ்​மேன்​களும் இரட்டை இலக்க ரன்னை எட்​ட​வில்​லை. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 0, கேப்​டன் ஷுப்​மன் கில் 8, துருவ் ஜூரெல் 7, ரவீந்​திர ஜடேஜா 9, மானவ் சுதார் 9, குல்​தீப் யாதவ் 5, பிரசித் கிருஷ்ணா 2 ரன்​களில் நடையை கட்​டினர். முகமது சிராஜ் 2 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இலங்கை அணி தரப்​பில் அசிதா பெர்​னாண்டோ 4, பிர​பாத் ஜெயசூரியா 3, லகிரு குமரா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

இதையடுத்து 372 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இலங்கை அணி தொடக்​கத்​திலேயே ஆட்​டம் கண்​டது. நிஷான் மதுஷ்கா பெர்​னாண்டோ 27 பந்​துகளில் 6 ரன்​கள் எடுத்த நிலை​யில் முகமது சிராஜ் வீசிய ஷார்ட் பாலை ஹூக் ஷாட் விளை​யாட முயன்ற போது டீப் ஃபைன் லெக் திசை​யில் பிரசித் கிருஷ்ணா​விடம் கேட்ச் ஆனது. இதன் பின்​னர் களமிறங்​கிய பசிந்து சூரியபண்​டாரா சந்​தித்த முதல் பந்​திலேயே எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

இந்த விக்​கெட்டை மானவ் சுதார் கைப்​பற்​றி​னார். இதைத் தொடர்ந்து களமிறங்​கிய கமிந்து மெண்​டிஸ் 12 பந்​துகளில் 2 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில் முதல் சிலிப் திசை​யில் நின்ற கே.எல்​.​ராகுலிடம் பிடி​கொடுத்து நடையை கட்​டி​னார். நிதான​மாக விளை​யாடிய லகிரு உதரா 58 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 16 ரன்​கள் எடுத்த நிலை​யில் மானவ் சுதார் பந்​தில் கல்லி திசை​யில் நின்ற துருவ் ஜூரெலிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார்.

47 ரன்​களுக்கு 4 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் கேப்​டன் தனஞ்​ஜெயா டி சில்​வாவுடன் இணைந்த சோனல் தினுஷா பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைக்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டார். 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் இலங்கை அணி 34 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 84 ரன்​கள் எடுத்​தது.

கேப்​டன் தனஞ்​ஜெயா டி சில்வா 73 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 31 ரன்​களும், சோனல் தினுஷா 36 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 25 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் களத்​தில் இருந்​தனர். இந்​திய அணி தரப்​பில் மானவ் சுதார் 2 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

கைவசம் 6 விக்​கெட்​கள் இருக்க வெற்​றிக்கு மேற்​கொண்டு 288 ரன்​கள் சேர்க்க வேண்​டும் என்ற நிலை​யில் இலங்கை அணி இன்​று கடைசி நாள்​ ஆட்​டத்​தை எதிர்​கொள்​கிறது.

‘சிக்​ஸரில் சதம்’

இலங்கை அணிக்கு எதி​ராக காலே மைதானத்​தில் நடை​பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி​யின் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ரிஷப் பந்த் முதல் இன்​னிங்​ஸில் ஒரு சிக்​ஸர் விளாசி​யிருந்​தார். தொடர்ந்து 2-வது இன்​னிங்​ஸில் நேற்று ரிஷப் பந்த் 2 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டார். இது​வரை சர்​வ​தேச டெஸ்ட் அரங்​கில் ரிஷப் பந்த் 100 சிக்​ஸர்​களை விளாசி உள்​ளார். இதன் மூலம் இந்த மைல்​கல் சாதனையை எட்​டிய முதல் இந்​திய வீரர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்​தார். மேலும் குறைந்த போட்​டிகளில் 100 சிக்​ஸர்​கள் விளாசிய வீரர் என்ற சாதனையை​யும் அவர், நிகழ்த்​தி​னார்.

இந்​திய வீரர்​கள் இதற்கு முன்​னர் வீரேந்​தர் சேவாக், ரோஹித் சர்மா ஆகியோர் தலா 91 சிக்ஸர்கள் விளாசி​யிருந்தனர். அதே வேளையில் இங்​கிலாந்​தின் முன்​னாள் கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் 82 டெஸ்ட் போட்​டிகளில் 100 சிக்​ஸர்​களை அடித்​ததே சாதனை​யாக இருந்​தது. இதை தற்​போது 51 டெஸ்ட் போட்​டிகளில் 100 சிக்​ஸர்​களை விளாசி முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்​ளார் ரிஷப் பந்த்.

சந்​தி​மால் காயம்

காலே டெஸ்ட் போட்​டி​யின் 4-வது நாளான நேற்று பீல்​டிங்​கின் போது எல்​லைக்​கோட்​டுக்கு அருகே

இலங்கை வீரர் தினேஷ் சந்​தி​மால் பந்தை தடுக்க பாய்ந்த போது தோள்பட்டை மற்​றும் கழுத்து பகு​தி​யில் காயம் அடைந்​தார். இதையடுத்து கன்​சன் பதிலி வீரர் விதி​யின் கீழ் அவருக்கு பதிலாக பசிந்து சூரிய பண்​டரா களமிறக்​கப்​ப​டார். இதற்கு நடு​வரும் அனு​மதி வழங்​கி​னார்​.

டெஸ்ட் அரங்​கில் 100 சிக்​ஸர்​கள் விளாசிய வீரர்​கள்

1.பென் ஸ்டோக்ஸ் (இங்​கிலாந்து) - 138

2.பிரண்​டன் மெக்​கலம் (நியூஸிலாந்​து) - 107

3.ஆடம் கில்​கிறிஸ்ட் (ஆஸ்​திரேலி​யா) - 100*

4.ரிஷப் பந்த்​ (இந்​தி​யா) - 100

SCROLL FOR NEXT