சென்னை: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் 77 வீரர்களை 10 ஐபிஎல் அணிகளும் வாங்கி இருந்தன. இதில் சில வீரர்களை அடிப்படை தொகைக்கே அணிகள் வாங்கின.
இந்தப் பட்டியலில் சில முக்கிய வீரர்களும் அடங்குவர். அந்த வகையில் இது ஐபிஎல் அணிகளுக்கு அடித்த ஜாக்பாட் என்றும் சொல்லலாம்.
டெல்லி கேபிடல்ஸ் அணி, கைல் ஜேமிசன், இங்கிடி, பென் டக்கெட், டேவிட் மில்லர், பிரித்வி ஷா ஆகியோரை அவர்களை அடிப்படை தொகைக்கு வாங்கியது. இவர்களில் மில்லர், இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி எதிரணியை அச்சுறுத்தும் திறன் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் அணி, டாம் பேன்டன், லூக் வுட், பிரித்விராஜ் யர்ராவை அடிப்படை தொகைக்கு வாங்கி இருந்தது. கொல்கத்தா அணியில் ஃபின் ஆலன், டிம் செய்ஃபெர்ட், ஆகாஷ் தீப், ராகுல் திரிபாதி, பிரஷாந்த் சோலங்கி, கார்த்திக் தியாகி ஆகியோர் அடிப்படை தொகைக்கு ஒப்பந்தம் செய்தது.
லக்னோவில் நோர்க்யா, வனிந்து ஹசரங்கா அடிப்படை தொகைக்கு வாங்கப்பட்டனர். மும்பை அணி இந்த ஏலத்தில் டிகாக், மயங்க் ராவத், அதர்வா அன்கோல்கர், முகமது இஸார், டேனிஷ் மேல்வர் ஆகியோரை வாங்கியது. இவர்கள் ஐவரும் அடிப்படை தொகைக்கு அந்த அணி ஒப்பந்தம் செய்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் விஷால் நிஷாத், பிரவீன் துபே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் குல்தீப் சென், பிரிஜேஷ் சர்மா, அமன் ராவ், விக்னேஷ் புதூர், யாஷ் ராஜ் ஆகியோரும், ஆர்சிபி அணியில் ஜேக்கப் டஃபி, ஜோர்டன் காக்ஸ், கனிஷ்க் சவுகான், விஹான் மல்ஹோத்ரா, விக்கி ஓஸ்ட்வால், சாத்விகே தேஸ்வால் ஆகியரையும், ஹைதராபாத் அணி சிவம் மாவி, கிரைன்ஸ், அமித் குமார், ஷாகிப் ஹுசைன், ஷிவாங் குமார் ஆகியோர் அடிப்படை தொகைக்கு ஒப்பந்தம் செய்தது.
நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி, மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹோசைன், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மேத்யூ ஷார்ட், நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ஸாக் பவுல்க்ஸ், இந்திய பேட்ஸ்மேன் சர்ஃபராஸ் கான் உள்ளிட்டோரை அடிப்படை தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.