விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ்: கால் இறுதி சுற்​றில் கலின்ஸ்கயா

செய்திப்பிரிவு

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வரு​கிறது. இதன் 9-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்​டம் ஒன்​றில் 22-ம் நிலை வீராங்க​னை​யான ரஷ்​யா​வின் அன்னா கலின்ஸ்கயா, 28-ம் நிலை வீராங்​க​னை​யான ஆஸ்​திரி​யா​வின் அனஸ்​டசியா பொட​போ​வாவை எதிர்த்து விளையாடி​னார்.

2 மணி நேரம் 49 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் கலின்ஸ்கயா 6-4, 2-6, 7-6(10-7) என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். 27 வயதான கலின்ஸ்கயா கிராண்ட் ஸ்லாம் தொடரில் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறு​வது இது 2-வது முறை​யாகும். இதற்கு முன்​னர் 2024-ம் ஆண்டு ஆஸ்​திரேலிய ஓபன் தொடரில் கலின்​ஸ்​கயா கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்து இருந்​தார்.

நேற்று முன்​தினம் இரவு ஆடவர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்​றில் 2-ம் நிலை வீர​ரான ஜெர்​மனி​யின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ் 7-6 (7-3), 6-4, 6-1 என்ற செட் கணக்​கில் 106-ம் நிலை வீரரான நெதர்​லாந்​தின் ஜெஸ்​பர் டி ஜாங்கை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்​னேறி​னார்.

அதேவேளை​யில் 11-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் ஆந்த்ரே ரூப்லெவ் 3-6, 6-7 (6-8), 6-4, 6-2, 3-6 என்ற செட் கணக்​கில் போராடி 26-ம் நிலை வீர​ரான செக் குடியரசின் ஜாக்​குப் மென்​சிக்​கிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார். இந்த ஆட்​டம் 3 மணி நேரம் 45 நிமிடங்​கள் நடை​பெற்​றது. மற்​றொரு ஆட்​டத்​தில் 28-ம் நிலை வீரரான பிரேசிலின் ஜோவோ ஃபொன்​சேகா 7-5, 7-6 (10-8), 5-7, 6-2 என்ற செட் கணக்​கில் 15-ம் நிலை வீர​ரான நார்​வே​யின் காஸ்​பர் ரூடை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார்.

SCROLL FOR NEXT