விளையாட்டு

ஆஷஸ் 4-வது டெஸ்ட்: ஆஸி. - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஆஷஸ் கிரிக்​கெட் டெஸ்ட் தொடரில் இங்​கிலாந்​து, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்​பர்​னில் தொடங்​க​வுள்​ளது. கிறிஸ்​து​மஸ் பண்​டிகை நாளுக்கு அடுத்த நாள் இப்​போட்டி தொடங்​கு​வ​தால் பாக்​ஸிங் டே டெஸ்ட் போட்​டி​யாக இது அமை​கிறது.

இங்​கிலாந்து அணி, ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்​கெட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. முதல் 3 போட்​டிகளி​லும் ஆஸ்​திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்​கில் கைப்​பற்​றி​விட்​டது. இந்​நிலை​யில் இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான 4-வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்டி புகழ்​பெற்ற மெல்​பர்ன் மைதானத்தில் இன்று தொடங்​க​வுள்​ளது.

கிறிஸ்​து​மஸ் தினத்​துக்கு மறு​நாள் இது பாக்​ஸிங் டே டெஸ்ட் போட்​டி​யாக அமை​கிறது. இந்​தத் தொடரில் பேட்​டிங், பந்​து​வீச்​சு, ஃபீல்​டிங் என அனைத்து துறை​களி​லும் ஆஸ்​திரேலிய அணி பலம் மிகுந்து காணப்​படு​கிறது. இதனால், இங்​கிலாந்து அணி வெற்றிக்குத் திரும்ப நினைத்த வாய்ப்​பு​களை ஆஸ்​திரேலிய வீரர்கள் பறித்தனர்.

பாட் கம்​மின்ஸ் காயம் அடைந்​துள்​ள​தால் 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்​திரேலிய அணிக்கு கேப்​ட​னாக ஸ்டீவன் ஸ்மித் செயல்​படு​கிறார். காயம் காரண​மாக பாட் கம்​மின்​ஸ், நேதன் லயன் ஆகியோர் அணி​யில் இடம்​பெற​வில்​லை. பாட் கம்​மின்ஸ் முதுகு வலி​யால் அவதிப்​படு​வ​தா​லும், நேதன் லயனுக்கு அறுவை சிகிச்சை செய்​யப்பட உள்​ள​தா​லும், அவர்​கள் அணியில் இடம்​பெற​வில்​லை.

பேட்​டிங்​கில் டிரா​விஸ் ஹெட், ஜேக் வெத​ரால்​டு, மார்​னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், உஸ்​மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன் என பலம் மிகுந்து காணப்​படு​கிறது. கடந்த 3 டெஸ்ட் போட்​டிகளி​லும் இவர்​களது பங்​களிப்பு அளப்​பரியது. எனவே, 4-வது டெஸ்ட் போட்​டி​யிலும் இவர்​களிட​மிருந்து சிறப்பான இன்​னிங்ஸ் வெளிப்​படும் என்று எதிர்​பார்க்​கலாம்.

அதே​போல் பந்​து​வீச்​சில், மிட்​செல் ஸ்டார்க், மைக்​கேல் நேசர், ஜைரிச்​சர்ட்​சன், பிரண்​டன் டாகெட், ஸ்காட் போலண்ட் ஆகியோர் எதிரணி வீரர்​களுக்கு அழுத்​தம் கொடுக்​கத் தயா​ராக உள்​ளனர். முதன்​முறை​யாக இந்​தத் தொடரில் சுழற்​பந்து வீச்​சாளர் இல்லாமலேயே ஆஸ்​திரேலிய அணி களமிறங்​கு​கிறது. அதேநேரத்தில் 3 போட்​டிகளி​லும் தொடர்ச்​சி​யாக தோல்வி கண்டுள்ள இங்​கிலாந்து அணி, 4-வது டெஸ்ட் போட்​டி​யில் வெற்றி பெறும் முயற்​சி​யில் களமிறங்​கு​கிறது.

இந்​தத் தொடரில் இங்​கிலாந்து அணி​யின் பேட்​டிங், பந்​து​வீச்சு இரண்​டுமே பலவீன​மாக காணப்​படு​கிறது. இங்​கிலாந்து வீரர்​கள் குறைந்த ரன்​களில் ஆட்​ட​மிழப்​பதும், மோச​மான பந்​து​வீச்சை செயல்​படுத்​து​வ​தா​லும் அந்த அணிக்கு இது​வரை வெற்றி கிடைக்க​வில்​லை.

மேலும் இன்​றைய போட்​டி​யில் இங்​கிலாந்து அணி​யின் வேகப்​பந்து வீச்​சாளர் ஜோப்ரா ஆர்ச்​சர் இடம்​பெற​வில்​லை. காயம் காரண​மாக அவர் 4, 5-வது டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாட மாட்டார் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது இங்​கிலாந்து அணிக்கு பெரிய பின்​னடை​வாக கருதப்​படு​கிறது.

பேட்​டிங்​கில் ஜாக் கிராவ்​லி, பென் டக்​கெட், ஜேக்​கப் பெத்​தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இருந்​தா​லும் இந்​தத் தொடரில் ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ராக யாரும் பெரிதாக ரன்​களைக் குவிக்க முடிய​வில்​லை.

எனவே, இந்​தப் போட்​டி​யில் இங்​கிலாந்து அணி​யின் முன்​னிலை வீரர்​கள் அனை​வரும் ஃபார்​முக்​குத் திரும்ப முயற்​சிக்​கக்​கூடும். அதே​போல் பவுலிங்​கில் வில் ஜேக்​ஸ், கஸ் அட்​கின்​சன், பிரைடன் கார்​ஸ், ஜோஷ் டங், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் எதிரணி வீரர்களுக்கு அழுத்​தம் கொடுப்​பார்​கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணி​ விவரம்: ஆஸ்​திரேலி​யா: டிரா​விஸ் ஹெட், ஜேக் வெத​ரால்​டு, மார்​னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித் (கேப்​டன்), உஸ்​மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மைக்​கேல் நேசர், மிட்​செல் ஸ்டார்க், ஜை ரிச்​சர்ட்​சன், பிரண்​டன் டாகெட், ஸ்காட் போலண்ட்.

இங்​கிலாந்​து: ஜாக் கிராவ்​லி, பென் டக்​கெட், ஜேக்​கப் பெத்​தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்​ஸ் (கேப்​டன்​), ஜேமி ஸ்மித்​, வில்​ ஜேக்​ஸ், கஸ்​ அட்​கின்​சன்​, பிரைடன்​ கார்​ஸ், ஜோஷ் டங்​.

SCROLL FOR NEXT