விளையாட்டு

“தமிழகத்தின் மிக முக்கிய தேர்தல்; வாக்கு செலுத்துவீர்...” - கிரிக்கெட் வீரர் அஸ்வின்

வேட்டையன்

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை - மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 11 மணி நிலவரப்படி சுமார் 37.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்தச் சூழலில் சினிமா, அரசியல், விளையாட்டு என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின், தனது மனைவி ப்ரீத்தி உடன் வந்து வாக்கு செலுத்தினார்.

“இந்த தேர்தல் தமிழகத்தின் மிக முக்கிய தேர்தல். நான் எனது உரிமையை செலுத்தியுள்ளேன். இதன் மூலம் எனது கடமையை செத்துள்ளேன். இப்போது மற்ற வாக்காளர்களும் இதைச் செய்ய வேண்டும். ஆட்சிக்கு வருபவர்களால் தமிழகம் மாற்றம் காணும் என நம்புகிறேன்” என அஸ்வின் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT