விளையாட்டு

ஆஸ்​திரேலி​யா​வின் ‘ஹால் ஆஃப் பேம்​’-ல் இணைந்​தார் பிரெட் லீ

செய்திப்பிரிவு

மெல்​பர்ன்: ஆஸ்​திரேலிய நாட்​டின் ‘ஹால் ஆஃப் பேம்​’-ல் முன்​னாள் வேகப்​பந்து வீச்​சாளர் பிரெட் லீ சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

புகழ்​பெற்ற முன்​னாள் வீரர்​களை கவுரவிக்​கும் வித​மாக​வும், அவர்​களது சாதனை​களைப் போற்​றும்​வித​மாக​வும் சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) ‘ஹால் ஆஃப் பேம்’ அங்​கீ​காரத்தை வழங்கி வரு​கிறது. ஐசிசி-​யின் இந்த ‘ஹால் ஆஃப் பேம்’ அங்​கீ​காரத்​தில் டான் பிராட்​மேன், கபில்​தேவ், சச்​சின், ராகுல் திரா​விட், டென்​னிஸ் லில்​லி, ரிச்​சர்ட் ஹாட்​லி, விவியன் ரிச்​சர்ட்ஸ் உள்​ளிட்ட பல வீரர்​கள் இடம்​பெற்​றுள்​ளன.

ஐசிசி​யின் ‘ஹால் ஆஃப் பேம்’ போல​வே, ஆஸ்​திரேலி​யா​விலும் ‘ஆஸ்​திரேலியா ஹால் ஆஃப் பேம்’அங்​கீ​காரத்தை ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் வழங்கி வரு​கிறது. அந்த ‘ஹால் ஆஃப் பேம்’ அங்​கீ​காரத்​தில் அண்​மை​யில் பிரெட் லீ சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

ஆஸ்​திரேலி​யா​வின் ‘ஹால் ஆஃப் பேம்​’-ல் டான் பிராட்​மேன், ரிக்கி பாண்​டிங், கீத் மில்​லர், டென்​னிஸ் லில்​லி, இயன் சேப்​பல், கிரேக் சேப்​பல், ஷேன் வார்​னே, ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ், மைக்​கேல் ஹஸ்ஸி உள்​ளிட்ட 60 வீரர்​கள் இடம்​பெற்​றுள்​ளனர். தற்​போது இந்த ‘ஹால் ஆஃப் பேம்​’-ல் பிரெட் லீயும் இணைந்​துள்​ளார்.

இதுதொடர்​பாக ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம்​(சிஏ) வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில் கூறும்​போது, “நிரூபிக்​கப்​பட்ட வெற்​றி​யாளர், கட்​டுப்​பாடற்ற இளைஞ​னாக பந்​து​வீசி​ய​வர். அனைத்து வித​மான கிரிக்​கெட்

போட்​டிகளி​லும் உண்​மை​யான எண்​டர்​டெ​யின​ராக இருக்​கும் பிரெட் லீ கிரிக்​கெட் ஆஸ்​திரேலியா​வின் ஹால் ஆஃப் பேமில் இணை​கிறார்” என்று கூறப்​பட்​டுள்​ளது.

ஆஸ்​திரேலிய அணிக்​காக 76 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி​யுள்ள பிரெட் லீ 310 விக்​கெட்களை எடுத்​துள்​ளார். அதில் 10 முறை 5 விக்​கெட்​களை எடுத்​துள்​ளார். மேலும், 221 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி 380 விக்​கெட்​களை கைப்பற்​றிள்​ளார். இதில் 14 முறை 4 விக்​கெட்​களும் 9 முறை 5 விக்​கெட்​களும் எடுத்துள்ளார்.

25 சர்​வ​தேச டி20 போட்​டிகளில் பங்​கேற்று 28 விக்​கெட்​களை சாய்த்​துள்​ளார். மொத்​த​மாக 322 போட்​டிகளில் விளை​யாடி 718 விக்​கெட்​களை எடுத்து அசத்​தி​யுள்​ளார். அது​மட்​டுமல்​லாமல் பேட்​டிங்​கில் 2,728 ரன்​கள் குவித்​துள்​ளார். இதில் 8 அரைசதங்​கள்​ அடங்​கும்​. இவர்​ 2003 ஐசிசி ஒரு​நாள்​ உலகக்​ கோப்​பை, 2006, 2009 ​சாம்​பியன்​ஸ்​ டி​ராபியைக்​ கைப்​பற்​றி ஆஸ்​திரேலிய அணி​யில்​ இருந்துள்​ளார்​.

SCROLL FOR NEXT