விளையாட்டு

சர்​வ​தேச போட்​டியில் ஓய்வு அறிவித்த லயோனல் மெஸ்ஸி கூறியது என்ன?

செய்திப்பிரிவு

பியூனஸ் அயர்ஸ்: சு​மார் இரண்டு தசாப்​தங்​களாக அர்​ஜெண்​டினா தேசிய அணிக்​காக விளை​யாடி வந்த நட்​சத்​திர கால்​பந்து வீர​ரான லயோனல் மெஸ்​ஸி, தனது 39-வது வயதில் சர்​வ​தேச போட்​டிகளி​லிருந்து ஓய்வு பெறு​வ​தாக அறி​வித்​துள்​ளார்.

6 உலகக்​கோப்​பைத் தொடர்​களில் பங்​கேற்​றுள்ள மெஸ்​ஸி, 2022-ல் கத்​தா​ரில் நடை​பெற்ற உலகக்​கோப்​பை​யில் அர்​ஜெண்​டினா அணி சாம்​பியன் பட்​டம் வென்​ற​தில் முக்​கிய பங்கு வகித்​தார். மேலும், 2026-ம் ஆண்டு உலகக்​கோப்​பை​யில் அர்​ஜெண்​டி​னாவை இறு​திப்​போட்டி வரை அழைத்​துச் சென்​றிருந்​தார் மெஸ்​ஸி.

இந்​நிலை​யில் தனது ஓய்வு முடிவு குறித்து இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் மெஸ்ஸி வெளி​யிட்​டுள்ள பதி​வில், “ஓய்வு முடிவை எடுப்​பது எனக்கு மிகுந்த வேதனையை அளித்​தது. இன்​ன​மும் அந்த வலி என் மனதை ஆழமாகத் துளைக்​கிறது. ஆனால், விடை​பெறு​வதற்​கான நேரம் வந்​து​விட்​டது என்​பதை நான் புரிந்து கொள்​கிறேன். நாங்​கள் அனைத்​துக் கோப்​பைகளை​யும் வென்ற கடந்த சில ஆண்​டு​களில் மட்​டுமல்ல, அதற்கு முன்​பிருந்த கடின​மான காலங்​களி​லும் கூட இந்த ஜெர்​சிக்​காக மைதானத்​தில் எனது நூறு சதவீத உழைப்பை அளித்​திருக்​கிறேன். எப்​போதும் களத்​தில் உங்​களுக்​காகவே போராடினேன், உங்​களுக்கு மகிழ்ச்​சி​யை​ கொடுப்​பதே எனது ஒரே இலக்​காக இருந்​தது.

எனக்​கான காலம் அதி​கமில்​லை. வாழ்க்​கை​யின் வெவ்​வேறு அத்​தி​யா​யங்​கள் முடிவுக்கு வந்​து​கொண்​டிருக்​கின்​றன. அதில் இந்த அத்​தி​யா​யத்​தின் முடிவு என் மனதை மிக​வும் காயப்​படுத்​துகிறது. தேசிய அணி​யின் ஒரு அங்​க​மாக இருப்​பதை நான் நேசித்​தேன், நேசிக்​கிறேன், எப்​போதும் நேசிப்​பேன். என்​னிடம் இருந்த அனைத்​தை​யும் அணிக்​குக் கொடுத்​து​விட்​டேன். இனி அளிப்​ப​தற்கு என்​னிடம் எது​வுமில்​லை. மேலும், இங்கு விளை​யாடத் தகு​தி​யான சிறந்த இளம் வீரர்​கள் பலரும் அணிக்​குள் வந்​து​கொண்​டிருக்​கிறார்​கள்.

கடந்த 20 ஆண்​டு​களாக நீங்​கள் கொடுத்த அன்​புக்கு நன்​றி. மைதானத்​துக்கு உள்​ளிருந்து உங்​கள் குரலைக் கேட்​பதை இனி நான் இழப்​பேன். இனிமேல் நானும் உங்​களில் ஒரு​வ​னாக மாறுகிறேன். நல்ல நேரத்​தி​லும், குறிப்​பாகக் கடின​மான நேரங்​களி​லும் மைதானத்​துக்கு வெளியே இருந்து எப்​போதும் அணிக்கு என் ஆதர​வைத் தரு​வேன். இந்த அழகான, அதே சமயம் சவால்​கள் நிறைந்த பயணத்​தில் எப்​போதும் என்​னுடன் துணைநின்ற என் குடும்​பத்​தினருக்கு நன்​றி. இந்த நீண்ட பயணத்தை என்​னுடன் பகிர்ந்​து​கொள்ள வாய்ப்​பளித்த அனைத்​துப் பயிற்​சி​யாளர்​கள், சக வீரர்​கள் மற்​றும் நிர்​வாகி​களுக்கு என் நன்​றிகள். மறக்க முடி​யாத நினை​வு​களை​யும் அரிய தருணங்​களை​யும் என் நெஞ்​சில் ஏந்​திச் செல்​கிறேன்.

நாம் ஒரு காலத்​தில் கனவு கண்ட தருணங்​களை, என் சக வீரர்​களு​டன் இணைந்து உங்​களுக்கு வழங்​கி​விட்​டேன் என்ற மன அமை​தி​யோடும் பெரு​மிதத்​தோடும் விடை​பெறுகிறேன். உங்​கள் அனை​வருட​னும் இணைந்து இவற்​றையெல்​லாம் அனுப​வித்​தது ஒரு சிலிர்ப்​பான உணர்​வு. உங்​கள் மீது மிகுந்த அன்பு கொள்​கிறேன்! என்னை ஓர் அர்​ஜென்​டி​னா​வாசி​யாகப் படைத்த இறைவனுக்கு நன்றி வாமோஸ் அர்​ஜென்​டினா (வாழ்க அர்​ஜென்​டி​னா!).

இறு​திப்​போட்டி முடிந்த இரண்டு நாட்​களுக்​குப் பிறகு, ஜூலை 21 அன்றே இந்த வரி​களை எழு​தி​விட்​டேன். எனது தந்தை மரணத்​துக்குப் பிறகு, எனது இந்த முடி​வில் நான் முன்பை விட மிக உறு​தி​யாக இருக்​கிறேன்” எனத் தெரி​வித்​துள்​ளார். அர்​ஜெண்​டினா அணிக்​காக 2005-ம் ஆண்டு அறி​முக​மான லயோனல் மெஸ்ஸி 207​போட்​டிகளில்​ விளை​யாடி 125 கோல்​களை அடித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT