விளையாட்டு

வெற்​றி​யுடன் தொடங்கியது மெக்சிகோ அணி | FIFA WC 2026

செய்திப்பிரிவு

மெக்சிகோ சிட்டி: 23-வது பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து திரு​விழா நேற்று நள்​ளிரவு மெக்​சிகோ​வில் கோலாகல​மாக தொடங்​கியது. மெக்​சிகோ சிட்​டி​யில் உள்ள அஸ்​டெகா மைதானத்​தில் நடை​பெற்ற தொடக்க ஆட்​டத்​தில் மெக்சிகோ - தென் ஆப்பிரிக்கா அணி​கள் மோதின.

9-வது நிமிடத்​தில் தென் ஆப்​பிரிக்கா தங்​களுக்​குத் தாங்​களே பெரும் சிக்​கலை ஏற்​படுத்​திக் கொண்​டது. கோல் கீப்​பர் ரான்​வென் வில்​லி​யம்​ஸிடம் பந்து செல்ல அவர், அதை ஸ்பெபெலோ சித்​தோலுக்கு பாஸ் செய்​தார். ஆனால் சித்​தோல் பந்தை சரியாகக் கட்​டுப்​படுத்​தத் தவறிய​தால் மெக்​சிகோ வீரர் எரிக்லிரா பந்​தைப் தட்​டிப் பறித்​தார்.

பின்​னர் எரிக் லிரா தட்​டி​விட்ட பந்தை பெற்ற ஜூலியன் குயினோன்​ஸ், கோல்​கீப்​பரின் கால்​களுக்கு இடையே புகுத்தி வலைக்​குள் தள்​ளி​னார். இதனால் மெக்​சிகோ 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​றது.இந்த கோல் காரண​மாக முதல் பாதி​யில் மெக்​சிகோ 1-0 என முன்​னிலை​யில் இருந்​தது. 67-வது நிமிடத்​தில் மெக்​சிகோ அணி​யின் ரோபர்ட்டோ ஆல்​வ​ராடோ கொடுத்த அருமை​யான கிராஸை பெற்ற ரவுல் ஜிமெனெஸ் தனது அசாத்திய திறமை​யால் தலை​யால் முட்டி கோல் அடித்​தார்.

இதனால் மெக்​சிகோ அணி 2-0 என முன்​னிலை பெற்​றது. கடைசி வரை போராடிய போதி​லும் தென் ஆப்​பிரிக்க அணி​யால் பதில் கோல் அடிக்க முடி​யாமல் போனது. முடி​வில் மெக்​சிகோ 2-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று முழு​மை​யாக 3 புள்​ளி​களை பெற்​றது. மெக்​சிகோ அணி தனது அடுத்த ஆட்​டத்​தில் தென் கொரி​யா​வுடன் 19-ம் தேதி மோதுகிறது. அதே நாளில் நடை​பெறும் மற்​றொரு ஆட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்​கா, செக் குடியரசு அணியை எதிர்​கொள்​கிறது.

46-வது கோல்

உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் மெக்​சிகோ​வின் ரவுல் ஜிமெனெஸ் கோல் அடித்​தார். சர்​வ​தேச போட்​டிகளில் அவர், அடித்த 46-வது கோலாக இது அமைந்​தது. இதன் வாயி​லாக மெக்​சிகோ அணிக்​காக அதிக கோல்​கள் அடித்த வீரர்​களின் பட்​டியலில் 2-வது இடத்தை ஜாரெட் போர்​கெட்​டி​யுடன் ரவுல் ஜிமெனெஸ் பகிர்ந்து கொண்​டார். இந்த பட்டியலில் 52 கோல்​களை அடித்து ஜேவியர் சிச்​சா​ரிட்டோ ஹெர்னாண்​டஸ் தொடர்ந்து முதலிடத்​தில் உள்​ளார்.

இன்றைய ஆட்டங்கள்

கத்தார் - சுவிட்சர்லாந்து , நேரம்: அதிகாலை 12:30

பிரேசில் - மொராக்கோ , அதிகாலை: 3:30

ஹைதி - ஸ்காட்லாந்து, நேரம்: காலை 6:30

ஆஸ்திரேலியா - துருக்கி, நேரம்: காலை 9:30

ஜெர்மனி - குராசாவோ, நேரம்: காலை 10:30

SCROLL FOR NEXT