விர்ஜில் வான் டிக், வடாரு என்டோ, விக்டர் கியோகெரஸ், ராணி கேடிரா
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘எஃப்’ நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், துனீசியா ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து
பயிற்சியாளர்: ரொனால்டு கோமென்.
பிஃபா தரவரிசை: 8
தகுதி பெற்ற விதம்: ஜி பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்ற நெதர்லாந்து அந்தப் பிரிவில் 20 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது. லிதுவேனியா, ஃபின்லாந்து, போலந்து, மால்டா அணிகளைப் பின்னுக்குத் தள்ளி உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்னேறியது.
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 1974, 1978, 2010-ம் ஆண்டுகளில் 2-ம் இடம்.
கடைசி உலகக் கோப்பை: 2022 கத்தார் உலகக் கோப்பையில் கால் இறுதியில் தோல்வி.
முதல் உலகக் கோப்பை: இத்தாலி, 1934.
பங்கேற்ற உலகக் கோப்பை தொடர்கள்: 13
நட்சத்திரங்கள்
விர்ஜில் வான் டிக்: நெதர்லாந்து அணியின் கேப்டனான விர்ஜில் வான் டிக், மிகச்சிறந்த தற்காப்பு ஆட்டக்காரர்களில் ஒருவர். அவரது கம்பீரமான ஆளுமையும் தற்காப்பு ஆட்டத்தை ஒருங்கிணைக்கும் திறனும் அணியின் முதுகெலும்பாகத் திகழ்கின்றன.
மெம்பிஸ் டிபாய்: நெதர்லாந்து அணிக்காகவும், மான்செஸ்டர் அணிக்காகவும் விளையாடி வரும் மெம்பிஸ் டிபாய், மிகச்சிறந்த தற்காப்பு வீரர்களில் ஒருவராக உள்ளார். ஆடுகளத்தின் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சிறப்பாக செயல்படக்கூடியவர். நம்பகத்தன்மை கொண்ட வீரராகத் திகழ்கிறார். நெதர்லாந்து தேசிய அணிக்காக இதுவரை அதிக கோல்களை அடித்த வீரராக இருக்கிறார்.
பிரெங்கி டி ஜாங்: தாக்குதல் ஆட்டத்தில் அதிக அனுபவத்தையும் கோல் அடிப்பதில் சிறந்த திறனையும் பெற்றுள்ளவர் பிரெங்கி டி ஜாங். நெதர்லாந்து அணியின் நடுகள ஆட்டக்காரர்களில் முக்கியமானவர். ஆட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி ஆட்டத்தின் போக்கை மாற்றியமைக்கும் உந்துசக்தியாகத் திகழ்கிறார்.
ஒட்டுமொத்த செயல் திறன்: 55 ஆட்டங்கள், 30 வெற்றி, 14 டிரா, 11 தோல்வி, 96 அடித்த கோல்கள், 52 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 14 vs ஜப்பான்
ஜூன் 20 vs ஸ்வீடன்
ஜூன் 25 vs துனீசியா
ஜப்பான்
பயிற்சியாளர்: ஹஜிமே மேரியாஸு.
பிஃபா தரவரிசை: 18
தகுதி பெற்ற விதம்: ஏஎப்சி பிரிவில் இடம்பெற்றிருந்த ஜப்பான்
3-வது சுற்றில் சீனா, பஹ்ரைன் சவுதியை வீழ்த்தியது. அடுத்த சுற்றில் ஆஸ்திரேலியாவுடன் டிரா செய்ததுடன் சீனா, பஹ்ரைனை வீழ்த்தி முன்னேறியது.
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 2002, 2010, 2018, 2022 போட்டிகளில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: கத்தார், 2022.
முதல் உலகக் கோப்பை: 1998 பிரான்ஸ்.
பங்கேற்ற உலகக் கோப்பை தொடர்கள்: 9
நட்சத்திரங்கள்
வடாரு என்டோ: ஜப்பான் அணியின் கேப்டனாக இருக்கும் வடாரு என்டோ, அபாரமான தற்காப்பு ஆட்டத்தில் வல்லவர். ஜப்பான் அணிக்கு மட்டுமல்லாமல் லிவர்பூல் அணிக்காகவும் விளையாடி வருகிறார். 2015-ல் ஜப்பான் தேசிய அணிக்குள் வந்த வடாரு என்டோ 2 முறை, உலகக் கோப்பைில் விளையாடியுள்ளார். ஜப்பான் அணிக்காக 94 சர்வதேச கோல்களை அடித்துள்ளார்.
வத்தனாபே சுயோஷி: ஜப்பான் அணியின் மிகச்சிறந்த தற்காப்பு ஆட்டக்காரர்களில் ஒருவர். 1.86 மீட்டர் உயரம் கொண்ட இவர் 2019 முதல் ஜப்பான் அணிக்காக விளையாடி வருகிறார். தேசிய அணிக்காக 11 சர்வதேச கோல்களை அடித்துள்ளார்.
ஒட்டுமொத்த செயல் திறன்: 25 ஆட்டங்கள், 7 வெற்றி, 6 டிரா, 12 தோல்வி, 25 அடித்த கோல்கள, 33 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 14 vs நெதர்லாந்து
ஜூன் 20 vs துனீசியா
ஜூன் 25 vs ஸ்வீடன்
ஸ்வீடன்
பயிற்சியாளர்: கிரஹாம் போட்டர்
பிஃபா தரவரிசை: 38
தகுதி பெற்ற விதம்: ஐரோப்பிய பிரிவு தகுதிச்சுற்றின் பி பிரிவில் இடம்பெற்ற ஸ்வீடன் தகுதிச்சுற்று அரை இறுதியில் உக்ரைனையும், அதற்கு அடுத்த போட்டியில் போலந்தையும் வீழ்த்தி முன்னேறியது.
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: 1958 உலகக் கோப்பையில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
கடைசி உலகக் கோப்பை: ரஷ்யா, 2018 உலகக் கோப்பையில் கால் இறுதியுடன் வெளியேற்றம்.
முதல் உலகக் கோப்பை: 1934 இத்தாலி உலகக் கோப்பை.
பங்கேற்ற உலகக் கோப்பை தொடர்கள்: 14.
நட்சத்திரங்கள்
ஐசக் ஹியன்: ஸ்வீடன் கண்டெடுத்த மிகச்சிறந்த நடுகள ஆட்டக்காரரான ஐசக் ஹியன், தேசிய அணிக்காகவும், அட்லாண்டா அணிக்காகவும் விளையாடி வருகிறார். ஸ்வீடன் அணிக்காக 2024 முதல் பங்கேற்று 29 சர்வதேச கோல்களை அடித்தவர்.
விக்டர் கியோகெரஸ்: ஸ்வீடன் அணிக்காக 2015 முதல் பங்கேற்று வருகிறார் விக்டர் கியோகெரஸ். ஸ்வீடன் தேசிய அணிக்காக 59 சர்வதேச கோல்களை அடித்தவர். இந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின் அரை இறுதியில் உக்ரைன் அணிக்கெதிராக ஹாட்ரிக் கோல்களை அடித்து அணியை வெற்றி பெறச் செய்தவர் விக்டர்.
ஒட்டுமொத்த செயல் திறன்: 51 ஆட்டங்கள், 19 வெற்றி, 13 டிரா, 19 தோல்வி, 80 அடித்த கோல்கள், 73 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 14 vs துனீசியா
ஜூன் 20 vs நெதர்லாந்து
ஜூன் 25 vs ஜப்பான்
துனீசியா
பயிற்சியாளர்: சாப்ரி லாமவுச்சி.
பிஃபா தரவரிசை: 46.
தகுதி பெற்ற விதம்: தகுதிச் சுற்று ஆட்டங்களில் 6 வெற்றி, ஒரு டிராவுடன் இருந்த துனீசியா மொத்தம் உள்ள 30 புள்ளிகளில் 28 புள்ளிகளைப் பெற்று முன்னேறியது.
உலகக் கோப்பையில் சிறப்பான செயல் திறன்: குரூப் சுற்றுடன் வெளியேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 2022 கத்தார் உலகக் கோப்பை.
முதல் உலகக் கோப்பை: அர்ஜெண்டினா 1978 உலகக் கோப்பை.
பங்கேற்ற உலகக் கோப்பை தொடர்கள்: 8.
நட்சத்திரங்கள்
ராணி கேடிரா: ஜெர்மனியில் பிறந்த ராணி கேடிரா நடுகள ஆட்டக்காரராகத் திகழ்கிறார். துனீசியா அணியின் முக்கிய துருப்பு சீட்டாக இருக்கிறார்.
எல்யெஸ் ஸ்கிரி: துனீசியா அணியின் தற்காப்பு மற்றும் நடுகள ஆட்டக்காரர்களில் ஒருவர் எல்யெஸ் ஸ்கிரி. அணியின் தூணாகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்
ஹன்னிபால் மெஜ்பிரி: பர்ன்லி கிளப் அணிக்காகவும், துனீசியா அணிக்காகவும் விளையாடி வருபவர் ஹன்னிபால். துனீசியா தேசிய அணிக்காக இதுவரை 45 சர்வதேச கோல்களை அடித்துள்ளார்.
ஒட்டுமொத்த செயல் திறன்: 18 ஆட்டங்கள், 37 வெற்றி, 5 டிரா, 10 தோல்வி, 14 அடித்த கோல்கள், 26 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 14 vs ஸ்வீடன்
ஜூன் 20 vs ஜப்பான்
ஜூன் 25 vs நெதர்லாந்து