விளையாட்டு

ஸ்பெயின் அணியை கதறவிட்ட வோசின்ஹா | FIFA WC 2026

செய்திப்பிரிவு

அட்லாண்டா: உல​கக் கோப்பை கால்​பந்து தொடரில் அமெரிக்காவின் அட்​லாண்டா நகரில் நேற்று முன்​தினம் ‘ஹெச்’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஸ்பெ​யின் - கேப் வெர்டே அணி​கள் மோதின. இந்த ஆட்​டம் கோல்​களின்றி டிரா​வில் முடிவடைந்​தது.

இந்த ஆட்டத்தில் கேப் வெர்டே அணி​யின் கோல் கீப்​ப​ரான 40 வயதாகும் வோசின்ஹா தனது அபார செயல் திற​னால் உலக கால்​பந்து ரசிகர்​களை பெரிதும் கவர்ந்​தார். கோல் கம்​பத்​தின் முன் சுவர் போல் நின்று ஸ்பெ​யின் அணி​யின் கோல் அடிக்​கும் 7 வாய்ப்​பு​களை வோசின்ஹா தகர்த்​தெறிந்​தார்.

பந்தை முழு​மை​யாகக் கட்​டுப்​படுத்​தி, கோல் கம்​பத்தை நோக்கி 27 முறை ஷாட்​களை அடித்து ஸ்பெ​யின் அணி அசுர ஆதிக்​கம் செலுத்​திய போதி​லும், அனுபவ​மிக்க கோல் கீப்​ப​ரான வோசின்ஹா மைதானத்​தின் நாலாபுற​மும் பறந்து தடுத்​தார். இதனால் கோல் அடிக்க முடி​யாமல் ஸ்பெ​யின் அணி​யும் அதன் ரசிகர்​களும் பெரும் ஏமாற்​ற​மும் விரக்​தி​யும் அடைந்​தனர்.

ஆட்​டத்​தின் இரண்​டாம் பாதி​யில் ஸ்பெ​யினின் இளம் சூப்​பர் ஸ்டார் லாமின் யமால் மாற்று வீர​ராகக் களம் புகுந்​தும் கூட, வோசின்ஹா மற்​றும் கேப் வெர்டே அணி​யின் இரும்​புக் கோட்டை போன்ற தற்​காப்பை மீறி கோல் அடிப்​ப​தற்​கான வழியைக் கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை.

தனது வரலாற்​றிலேயே முதன்​முறை​யாக உலகக் கோப்பை மேடை​யில் கால்​ப​தித்​துள்ள கேப் வெர்டே அணி, தனது முதல் போட்​டி​யிலேயே 2010-ம் ஆண்​டின் உலக சாம்​பியனும், இந்த ஆண்டு உலகக் கோப்​பையை வெல்​லக்​கூடிய அணி​களில் முதன்​மை​யான​தாகக் கருதப்​படும் பலம் வாய்ந்த ஸ்பெ​யின் அணிக்கு எதி​ராக ஒரு புள்​ளியைப் பெற்று வரலாற்​றுச் சாதனை படைத்துள்ளது.

‘இன்​ஸ்​டாகி​ராமில் 24 லட்​சம் பேர்’

ஸ்பெ​யின் அணிக்கு எதி​ரான போட்டி முடிந்த சில மணி நேரங்களி​லேயே, கேப் வெர்டே கோல்​கீப்​பர் வோசின்​ஹா​வின் இன்​ஸ்​டாகி​ராம் பக்​கம் உலக அளவில் வைரலானது. போட்டி தொடங்​கு​வதற்கு முன்பு வரை ஏறத்​தாழ 50,000 பேர் மட்​டுமே பின்​தொடர்ந்து வந்த அவரது இன்​ஸ்​டாகி​ராம் கணக்​கு, போட்டி முடிந்த சில மணி நேரங்​களி​லேயே 24 லட்​சத்​துக்​கும் மேல் ஃபாலோயர்​ஸ்​களைக் கடந்து சாதனை படைத்​தது.

SCROLL FOR NEXT