விளையாட்டு

88 வருடங்​களுக்கு பின் சுவிட்சர்லாந்து அணி வெற்றி | FIFA WC 2026

செய்திப்பிரிவு

வான்கூவர்: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் கனடாவின் வான்​கூவர் நகரில் நேற்று நடை​பெற்ற நாக் அவுட் சுற்று ஆட்​டத்​தில் சுவிட்சர்லாந்து - அல்ஜீரியா அணி​கள் மோதின.

ஆட்​டத்​தின் 10-வது நிமிடத்​தில் சுவிட்​சர்​லாந்து அணி​யின் வீரர் மன்​சாம்​பி, அல்​ஜீரிய அணி​யின் டிஃபென்ஸை கடந்து பந்தை வேக​மாக கடத்​திச் சென்​றார். பெனால்டி பாக்​ஸிற்​குள் நுழைந்த அவர், பந்து களத்தை விட்டு வெளி​யேறாமல் தடுத்​து, 6 அடி தூர பாக்​ஸிற்​குள் இருந்த எம்​போலோ தட்​டி​விட அவர், அதை கோல் வலைக்​குள் திணித்​தார். இதனால் சுவிட்​சர்​லாந்து அணி 1-0 என முன்​னிலை பெற்​றது.

2-வது பாதி ஆட்​டம் தொடங்​கிய நிலை​யில் 46-வது நிமிடத்​தில் சுவிட்​சர்​லாந்து அணி 2-வது கோலை அடித்​தது. அல்​ஜீரிய தற்காப்பு வீரர்​கள் பந்தை சரி​யாக கிளியர் செய்​யத் தவறிய நிலை​யில் பந்து நேராக சுவிட்​சர்​லாந்து அணி​யின் வீரர் எண்​டோயே​விடம் வந்​தது. பாக்​ஸின் விளிம்பு பகு​தி​யில் பந்​தைக் கட்டுப்​படுத்​திய எண்​டோயே மிக லாவக​மாக கோல் வலைக்​குள் செலுத்​தி​னார்.

இதனால் சுவிட்​சர்​லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்​கில் முன்னிலை பெற்​றது. கடைசி வரை போராடி​யும் அல்​ஜீரியா அணி​யால் பதிலடி கொடுக்க முடிய​வில்​லை. முடி​வில் சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றுக்கு முன்​னேறியது.

SCROLL FOR NEXT