விளையாட்டு

ஆஸ்திரியாவை பந்தாடியது ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி | FIFA WC 2026

செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் உள்ள சோபி மைதானத்​தில் நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்​டத்​தில் ஸ்பெயின் - ஆஸ்திரியா அணி​கள் மோதின.

36 வது நிமிடத்​தில் ஸ்பெ​யின் அணி முதல் கோலை அடித்​தது. அந்த அணி​யின் வீரர் குகுரெல்லா பாக்ஸ் பகு​திக்​குள் துல்​லிய​மாக கொடுத்த பாஸை யாரும் மார்க் செய்​யப்​ப​டா​மல் இருந்த மிகைல் ஒயார்​சபல் பந்தை எளி​தாக கோல் வலை​யினுள் செலுத்​தி​னார். இதனால் ஸ்பெ​யின் 1-0 என முன்​னிலை பெற்​றது. முன்​ன​தாக குகுரெல்லா அடித்த கோல், ஃபவுல் காரண​மாக நடு​வ​ரால் மறுக்​கப்​பட்​டது.

66-வது நிமிடத்​தில் ஸ்பெ​யின் அணி​யின் வீரர் அலெக்ஸ் பயேனா கொடுத்த அரு​மை​யான கிராஸை பெற்ற பெட்ரோ போரோ தலையால் முட்டி கோல் அடித்​தார். இதனால் ஸ்பெ​யின் அணி 2-0 என்ற முன்​னிலையை நோக்கி நகர்ந்​தது. 89-வது நிமிடத்​தில் மீண்டும் குகுரெல்​லா, ஒயார்​சபல் கூட்​டணி இணைந்​தது. குகுரெல்லா உதவி​யுடன் பந்தை பெற்ற ஒயார்​சபல் கோல் அடித்து அசத்தினார்.

இதனால் ஸ்பெ​யின் 3-0 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை வகித்தது. கடைசி வரை போராடிய போதி​லும் ஆஸ்​திரியா அணியால் பதிலடி கொடுக்க முடி​யாமல் போனது. முடி​வில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றுக்கு முன்​னேறியது. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் வரும் 6-ம் தேதி நடை​பெறும் நடத்​தில்​ ஸ்​பெ​யின்​ அணி, போர்​ச்​சுகலுடன்​ மோதுகிறது.

35 போட்​டி​யில் தோல்வி இல்லை

ஸ்பெ​யின் அணி கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் முதல் தற்​போது வரை தொடர்ச்​சி​யாக 35 போட்​டிகளில் தோல்​வியடை​யாமல் உள்​ளது. இந்த கால​கட்​டத்​தில் ஸ்பெ​யின் அணி 2023-ம் ஆண்டு நேஷன்ஸ் லீக் மற்​றும் 2024-ம் ஆண்டு ஐரோப்​பிய சாம்​பியன்​ஷிப் ஆகிய​வற்றை வென்​றது. ஆனால் 2025-ம் ஆண்டு நேஷன்ஸ் லீக் இறு​திப் போட்​டி​யில் போர்ச்​சுகலிடம் பெனால்டி முறை​யில் தோல்​வியடைந்​தது (நிர்​ண​யிக்​கப்​பட்ட ஆட்​டநேரத்​தில் அது டிரா என்றே கணக்​கிடப்​படும்).

2010-ம் ஆண்டுக்கு பிறகு வெற்றி

நடப்பு உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று நடை​பெற்ற நாக் அவுட் சுற்​றில் ஆஸ்​திரி​யாவை 3-0 என்ற கணக்​கில் ஸ்பெ​யின் தோற்​கடித்​தது. ஸ்பெ​யின் அணி 2010-ம் ஆண்​டில் சாம்​பியன் பட்​டம் வென்​றதற்​குப் பிறகு, உலகக் கோப்​பை​யின்​ நாக்​-அவுட்​ போட்​டி ஒன்​றில்​ வெற்​றி பெறு​வது இதுவே ​முதன்​முறை​யாகும்.

519 நிமிடங்கள்... உனாய் சிமோன் சாதனை

நடப்பு உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று நடை​பெற்ற நாக் அவுட் சுற்​றில் ஸ்பெ​யின் அணி 3-0 என்ற கோல் கணக்​கில் ஆஸ்​திரி​யாவை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றுக்கு முன்னேறியது. ஸ்பெ​யின் அணி இது​வரை விளை​யாடிய 4 ஆட்டங்​களி​லும் ஒரு கோலை கூட வாங்​க​வில்​லை. இதில், அந்த அணி​யின் கோல் கீப்​பர் உனாய் சிமோனின் அபார செயல் திறன் முக்​கி​யத்​து​வம் பெற்​றிருந்​தது.

கடந்த இரு உலகக் கோப்பை தொடர்​களி​லும் உனாய் சிமோன் 519 நிமிடங்​கள் விளை​யாடி எதிரணியை கோல்​கள் அடிக்க விடாமல் தடுத்​துள்​ளார். முன்​ன​தாக, இத்​தாலி​யின் கோல்​கீப்​பர் வால்​டர் ஜெங்கா 1990-ம் ஆண்டு 517 நிமிடங்​கள் கோல் அடிக்காமல் தடுத்து சாதனை படைத்​திருந்​தார். இதை தற்​போது 36 வயதான உனாய் சிமோன் முறியடித்து புதிய சாதனை படைத்துள்​ளார்​.

SCROLL FOR NEXT