விளையாட்டு

கால் இறுதியில் பிரான்ஸுடன் மோதும் மொராக்கோ | FIFA WC 2026

செய்திப்பிரிவு

ஹவுஸ்டன்: உல​கக் கோப்பை கால்​பந்து கால் இறு​திச் சுற்​றில் பிரான்ஸ் அணி​யுடன் மொராக்கோ மோதவுள்​ளது. ஹவுஸ்​டன் மைதானத்​தில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற கால் இறுதிக்கு முந்​தையச் சுற்று ஆட்​டத்​தில் மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்​கில் கனடா அணி​யைத் தோற்​கடித்து கால் இறு​திக்கு முன்​னேறியது.

மொராக்கோ அணி சார்​பில் அஸிடைன் அவு​னாஹி 50, 82-வது நிமிடங்​களில் 2 கோல்​கள் அடித்​தார். மொராக்​கோ​வின் மற்​றொரு வீரர் சவுபி​யான் ராஹிமி 90+8-வது நிமிடத்​தில் ஒரு கோலடித்​தார். கோலடிக்க எவ்​வளவோ முயற்சி செய்​தும் கனடா அணி​யால் இறுதி வரை அதில் வெற்றி பெற முடிய​வில்​லை. ஆட்​டம் முடி​யும் வரை இந்​நிலை நீடிக்​கவே மொராக்கோ 3-0 என்ற கணக்​கில் வெற்றி பெற்று கால் இறு​திக்கு முன்​னேறியது.

ஜூலை 10-ல் மோதல்

ஜூலை 10-ம் தேதி அதி​காலை 1.30 மணிக்கு நடை​பெறும் கால் இறுதி ஆட்​டத்​தில் பலம்​வாயந்த பிரான்ஸ் அணி​யைச் சந்திக்கவுள்​ளது மொராக்​கோ. அமெரிக்​கா​வின் மசாசூசெட்ஸ் மாகாணத்​தின் ஃபாக்​ஸ்​பரோ​விலுள்ள கில்​லெட் மைதானத்​தில் இந்​தப் போட்டி நடை​பெறவுள்​ளது.

கடந்த 2022-ம் ஆண்டு நடை​பெற்ற உலகக் கோப்​பை​யில் பிரான்ஸ், மொராக்கோ அணி​கள் அரை​யிறு​தி​யில் மோதின. இதில் பிரான்ஸ் 2-0 என்ற கணக்​கில் வெற்றி பெற்று இருந்​தது. இந்த தோல்விக்கு மொராக்கோ அணி தற்​போது பதிலடி கொடுக்குமா என ரசிகர்​கள் ஆவலுடன்​ எதிர்​பார்த்​து காத்திருக்கின்​றனர்​.

SCROLL FOR NEXT