விளையாட்டு

பிரேசிலுடன் டிரா செய்​தது மொராக்கோ | FIFA WC 2026

செய்திப்பிரிவு

நியூ​யார்க்: உலகக் கோப்பை கால்பந்துப் போட்​டி​யின் சி பிரிவு லீக் ஆட்​டத்​தில் பிரேசில், மொராக்கோ அணி​கள் மோதிய ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் டிரா​வில் முடிவடைந்​தது.

இந்த லீக் ஆட்​டம் நியூ ஜெர்​ஸி​யிலுள்ள மெட்​லைப் மைதானத்​தில நேற்று அதி​காலை 3.30 மணிக்கு நடை​பெற்​றது. மொராக்கோ அணி​யில் இடம்​பெற்ற வீரர்​கள் அனை​வரு​மே, வெளி​நாடு​களில் பிறந்து பின்​னர் மொராக்​கோவுக்கு இடம்​பெயர்ந்தவர்​கள் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

5 முறை உலக சாம்​பிய​னான பிரேசிலுக்கு ஈடு​கொடுக்​கும் வகையில் மொராக்கோ வீரர்​களின் ஆட்​டம் அமைந்​திருந்​தது. அதற்கேற்​றார் போலவே ஆட்​டத்​தின் முதல் கோலை மொராக்கோ வீரர்​கள்​தான் அடித்​தனர்.

மொராக்​கோ​வின் முதல் கோலை இஸ்​மா​யில் சைபாரி ஆட்டத்தின் 21-வது நிமிடத்​தில் அடித்​தார். இதனால் மொராக்கோ 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​றது. முதல் கோலை அடித்த நடுகள வீர​ரான இஸ்​மா​யில் சைபாரி, ஸ்பெ​யினின் டெர்ராசாவில் பிறந்​தவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதையடுத்து பிரேசில் வீரர்​கள் சுதா​ரித்து விளை​யாடத் தொடங்கினர். அதற்கு நல்ல பலனும் கிடைத்​தது. ஆட்​டத்​தின் 32-வது நிமிடத்​தில் பிரேசில் வீரர் வினிசி​யஸ் ஜூனியர் அபார​மாக செயல்​பட்டு ஒரு கோலை அடித்​தார். இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்​பட்​டது.

இதைத் தொடர்ந்து கோலடிக்க பிரேசில் வீரர்​கள் தீவிர முயற்சியில் இறங்​கினர். முதல் பாதி முடிந்​த நிலை​யில் 1-1 என்ற நிலை நீடித்​தது. 2-வது பாதி​யில் இரு அணி வீரர்​களும் கோலடிக்க தீவிர செய்​தனர்.

ஆனால் அவர்​களது எந்த முயற்​சிக்​கும் பயன் கிடைக்​க​வில்​லை. கூடு​தல் நேரத்​தில் கோல் அடிக்​கப்​ப​டாத​தால் ஆட்​டம் 1-1 என்ற கணக்​கில் டிரா​வில் முடிவடைந்​தது. இதனால் இரு அணி​களுக்​கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து வழங்​கப்​பட்​டது.

80 ஆயிரம் பேர்

இந்​தப் போட்​டியைக் காண மெட்​லைப் மைதானத்​தில் 80,663 ரசிகர்​கள் கூடி​யிருந்​தனர். மொராக்கோ அடுத்த போட்​டி​யில் ஸ்காட்​லாந்தை எதிர்​கொண்டு விளை​யாட உள்​ளது. அதே நேரத்தில் பிரேசில் அணி, ஹைதி​யுடன் பலப்​பரீட்சை நடத்தவுள்ளது.

நெய்​மர் காயம்

பிரேசில் அணி​யின் நட்​சத்​திர வீரர் நெய்​மர் காயம் காரண​மாக இந்த ஆட்​டத்​தில் பங்​கேற்​க​வில்​லை. அவர் தொடர்ந்து ஓய்​வெடுத்து வரு​கிறார். இருந்​த​போதும் பிரேசில், மொராக்கோ அணி​களுக்கு இடையி​லான போட்​டியை ஓய்​வறையில் இருந்​த​படி அவர் ரசித்​தார்.

88 ஆண்​டு​கள்

உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் முதல் ஆட்​டத்​தில் கடந்த 88 ஆண்​டு​களாக தோல்வியே காணாத அணி என்ற பெரு​மையை பிரேசில் பெற்​றுள்​ளது. 1930, 1934-ல் நடை​பெற்ற உலகக் கோப்பை போட்​டி​யின் முதல் ஆட்​டத்​தில் பிரேசில் அணி தோல்வி கண்​டது.

அதன் பின்​னர் 1938-ல் நடை​பெற்ற உலகக் கோப்​பை​யின் முதல் ஆட்​டத்​தில் போலந்து அணி​யை, பிரேசில் 6-5 என்ற கணக்​கில் வென்​றது. அதன் பின்​னர் நடை​பெற்ற அனைத்து உலகக் கோப்பை போட்​டிகளில் பிரேசில் அணி முதல் ஆட்​டத்​தில் வெற்றி அல்​லது டிரா செய்து வரு​கிறது. நேற்​றைய ஆட்​டத்​தி​லும் மொராக்​கோவுடன்​ பிரேசில்​ டி​ரா செய்​தது. இதன்​மூலம்​ கடந்​த 88 ஆண்டுகளாக முதல்​ ஆட்​டத்​தில்​ தோல்​வியே ​காணாத அணி என்ற பெரு​மையை பிரேசில்​ அணி பெற்​றுள்​ளது.

SCROLL FOR NEXT