விளையாட்டு

குராசாவோ தோல்வி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஐவரி கோஸ்ட் | FIFA WC 2026

செய்திப்பிரிவு

பிலடெல்பியா: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் குரூப் இ பிரிவு லீக் ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் குராசாவோ அணியைத் தோல்வியுறச் செய்தது.

இந்த ஆட்டம் பிலடெல்பியாவிலுள்ள லிங்கன் ஃபைனான்சியல் ஃபீல்ட் மைதானத்தில் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கியது. ஐவரி கோஸ்ட் அணிக்காக நிக்கோலஸ் பெப் 7, 64-வது நிமிடங்களில் 2 கோல்களை அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இந்த வெற்றியின் மூலம் ஐவரி கோஸ்ட் அணி குரூப் இ பிரிவில் 2-ம் இடம் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

SCROLL FOR NEXT