பிலடெல்பியா: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் எல் பிரிவு லீக் ஆட்டத்தில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றில் தடம்பதித்தது.
இந்த ஆட்டம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு பிலடெல்பியா மைதானத்தில் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 31-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் பீட்டர் சுசிக் ஒரு கோலடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். முதல் பாதி வரை 1-0 என்ற நிலையில் குரோஷியா முன்னிலையில் இருந்தது.
ஆனால் 2-வது பாதியில் சுதாரித்து விளையாடிய கானா வீரர்கள் 73-வது நிமிடத்தில் ஒரு கோலடித்து 1-1 என்ற கணக்கில் சமநிலையை ஏற்படுத்தினர். அந்த அணியின் டெரிக் லுகாஸன் இந்த கோலை அபாரமான வகையில் அடித்தார். இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது. எனவே, இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற பரபரப்பானநிலை ஏற்பட்டது.
இதையடுத்து இரு அணி வீரர்களும் கோலடிக்க தீவிர முயற்சியில் இறங்கினர். குரோஷிய அணி வீரர்களின் முயற்சிக்கு 83-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. கார்னர் பகுதியிலிருந்து நட்சத்திர வீரர் லூகா மோட்ரிக் அடித்த பந்தை கோல் வலைக்கு அருகில் இருந்த நிகோலாவிளாசிக் தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார்.
இதனால் 2-1 என்ற கணக்கில் குரோஷியா முன்னிலை பெற்றது. இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே 2-1 என்ற கணக்கில் குரோஷியா வெற்றி பெற்றது. நிகோலா விளாசிக்கின் இந்த கோலால் அந்த அணி வெற்றி பெற்றது. இந்தப் பிரிவிலிருந்து இங்கிலாந்து, குரோஷியா, கானா அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின. புள்ளிகள் பெறாத பனாமாஅணி தொடரிலிருந்து வெளியேறியது.
நாக்-அவுட் சுற்று ஆட்டங்களின் அட்டவணை
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து 32 அணிகள் மோதும் நாக்-அவுட் சுற்று ஆட்டங்களின் அட்டவணை வெளியாகியுள்ளது. நடப்புச் சாம்பியன் அர்ஜெண்டினாவுடன் வரும் ஜூலை 4-ம் தேதி கேப்வெர்டே அணி மோதவுள்ளது.
நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் (ஜூலை 29-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. நாக்-அவுட் சுற்றில் 32 அணிகள் மோதும் 16 ஆட்டங்களின் அட்டவணை விவரம்