விளையாட்டு

நியூஸி.க்கு எதி​ரான டெஸ்ட் - இங்கிலாந்து அணி வெற்றி

செய்திப்பிரிவு

லண்​டன்: நியூஸிலாந்​துக்கு எதி​ரான முதல் கிரிக்​கெட் டெஸ்ட் போட்டி​யில் இங்கிலாந்து அணி 115 ரன்​கள் வித்​தி​யாசத்தில் வெற்றி பெற்​றுள்​ளது.

நியூஸிலாந்து அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 3 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இந்​நிலை​யில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்​தில் தொடங்​கியது. முதல் இன்​னிங்​ஸில் இங்​கிலாந்து 140 ரன்​களும், நியூஸிலாந்து 113 ரன்​களும் எடுத்து ஆட்டமிழந்தன. 27 ரன்​கள் முன்​னிலை பெற்ற நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இங்​கிலாந்து 226 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது.

இதையடுத்து 254 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் நியூஸிலாந்து அணி 2-வது இன்​னிங்ஸை விளை​யாடியது. ஆனால் 3-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் நியூஸிலாந்து 5 விக்​கெட் இழப்புக்கு 55 ரன்​கள் என்ற நிலை​யில் தடு​மாறிக் கொண்டிருந்தது. நேற்று நடை​பெற்ற 4-ம் நாள் ஆட்​டத்தை டேவன்கான்வே 19 ரன்​களு​ட​னும், டாம் பிளண்​டல் 2 ரன்​களு​ட​னும் தொடங்​கினர். ஆனால் கான்வே 41 ரன்​களுக்​கும், பிளண்​டர் 4 ரன்களுக்​கும் ஆட்​ட​மிழந்​தனர். நாதன் ஸ்மித் 4, கைல் ஜேமிசன் 6 ரன்​களுக்கு வீழ்ந்​தனர்.

இறு​தி​யில் 40.3 ஓவர்​களில் 138 ரன்​களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது. கிளென் பிலிப்ஸ் 44 ரன்​கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து அணித்​தரப்​பில் கஸ்அட்​கின்​ஸன் 5, ஆலி ராபின்​சன், ஜோஷ் டங் ஆகியோர் தலா 2, பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்​கெட்​டைச் சாய்த்​தனர்.

இதையடுத்து 115 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 1-0 என்ற கணக்​கில் தொடரில் முன்​னிலை வகிக்கிறது. ஆட்​ட​நாயக​னாக ஆலி ராபின்​சன் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணி​களுக்கு இடையி​லான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி லண்​டன் கெனிங்​டன் ஓவல் மைதானத்​தில் தொடங்கவுள்​ளது.

SCROLL FOR NEXT