விளையாட்டு

ஜோர்டான் காக்ஸ், ஜோ ரூட் அரை சதம் | PAK vs ENG

செய்திப்பிரிவு

லீட்ஸ்: இங்கிலாந்து - பாகிஸ்தான் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்​டிங்​லி​யில் உள்ள லீட்ஸ் மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 48.1 ஓவர்​களில் 171 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக அப்​துல்லா ஷபிக் 61, இமாம் உல் ஹக் 42, கேப்​டன் சல்​மான் ஆகா 21, குர்​ரம் ஷாசாத் 14, முகமது ரிஸ்​வான் 12 ரன்​கள் சேர்த்​தனர்.

இங்​கிலாந்து அணி தரப்​பில் ஆலி ராபின்​சன், ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 5 விக்​கெட்​களை வீழ்த்​தினர். இதையடுத்து பேட் செய்த இங்​கிலாந்து முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 25 ஓவர்களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 112 ரன்​கள் எடுத்​தது. தொடக்க வீரர்​களான பென் டக்​கெட் 15 ரன்​களில் முகமது அப்பாஸ் பந்​தி​லும், எமிலியோ கே 33 ரன்​களில் முகமது அலி பந்திலும் ஆட்​ட​மிழந்​தனர்.

ஜோர்​டான் காக்ஸ் 23, கேப்​டன் ஜோ ரூட் 37 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டம் நடை​பெற்​றது. மழை காரண​மாக மதிய உணவு இடைவேளைக்கு பின்​னரே ஆட்​டம் தொடங்​கப்​பட்​டது. ஜோர்​டான் காக்​ஸ், ஜோ ரூட் ஆகியோர் சிறப்பாக விளை​யாடி அரை சதம் கடந்​தனர்.

இந்த ஜோடி​யின் சிறப்​பான ஆட்​டத்​தால் இங்​கிலாந்து அணி 39.4 ஓவர் களில் 171 ரன்​களை கடந்து முன்​னிலை பெறத் தொடங்கியது. மட்​டையை சுழற்​றிய ஜோர்​டான் காக்ஸ் 100 பந்​துகளில், 14 பவுண்​டரி​களு​டன் 73 ரன்​கள் எடுத்த நிலை​யில் அலி உஸ்​மான் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

45 ஓவர்​கள் வீசப்​பட்ட நிலை​யில் இங்​கிலாந்து அணி 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 203 ரன்​கள் எடுத்​திருந்​தது. ஜோ ரூட் 62 ரன்​களும், ஹாரி புரூக் ரன் ஏதும் எடுக்​காமலும் களத்​தில்​ இருந்​தனர்​.

SCROLL FOR NEXT