விளையாட்டு

ஆஷஸ் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் கஸ் அட்கின்ஸன் விலகல்

செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஆஷஸ் கிரிக்​கெட் டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப்​பந்து வீச்​சாளர் கஸ் அட்​கின்​ஸன் காயம் காரண​மாக வில​கி​யுள்​ளார்.

ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்ள இங்கிலாந்து கிரிக்​கெட் அணி 5 போட்​டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இதில் முதல் 3 போட்டிகளி​லும் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்​கில் ஏற்கெ​னவே கைப்​பற்​றி​யுள்​ளது. இதைத் தொடர்ந்து கடந்த 26-ம் தேதி 4-வது டெஸ்ட் போட்டி மெல்​பர்​னில் தொடங்​கியது.

இந்த டெஸ்ட் போட்​டி​யில் இங்​கிலாந்து 4 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றுள்​ளது. 14 ஆண்​டு​களுக்கு பிறகு ஆஸ்​திரேலிய மண்​ணில் இங்​கிலாந்து அணி வெற்​றியைப் பெற்​றுள்​ளது. இருப்பினும் 5 போட்​டிகள் கொண்ட தொடரில் ஆஸ்​திரேலியா 3-1 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது.

இந்​நிலை​யில், ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்து அணி​கள் மோதும் 5-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 4ம் தேதி சிட்னி​யில் தொடங்​கு​கிறது. இதனிடையே ஆஷஸ் தொடரின் எஞ்சிய போட்​டிகளில் இருந்து இங்​கிலாந்து அணி​யின் வேகப்​பந்து வீச்​சாளர் கஸ் அட்​கின்​ஸன் காயம் காரண​மாக விலகி உள்ளார்.

மெல்​பர்​னில் நடை​பெற்ற 4-வது டெஸ்ட் போட்​டி​யில் 3 விக்​கெட்​களைச் சாய்த்​திருந்​தார் கஸ் அட்​கின்ஸன். ஆஷஸ் தொடரில் இருந்து கஸ் அட்​கின்​ஸன் வில​கி​யிருப்​பது இங்​கிலாந்து அணிக்கு பின்​னடைவை ஏற்​படுத்தி உள்​ள​தாக கிரிக்​கெட் விமர்சகர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT