விளையாட்டு

இங்கிலாந்து அணியில் மார்க் வுட் விலகல்

செய்திப்பிரிவு

பிரிஸ்பன்: இடது முழங்​கால் பகு​தி​யில் காயம் அடைந்த இங்கிலாந்து அணி​யின் வேகப்​பந்து வீச்​சாளர் மார்க் வுட், ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

5 போட்​டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரில் இங்​கிலாந்து அணி முதல் 2 ஆட்​டங்​களி​லும் படு​தோல்​வியை சந்​தித்​தது. இதனால் அந்த அணி தொடரில் 0-2 என்ற கணக்​கில் பின்​ தங்கி​யுள்​ளது.

3-வது டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி அடிலெய்டில் தொடங்க உள்​ளது. இந்​நிலை​யில் இடது முழங்​கால் பகு​தி​யில் காயம் அடைந்த இங்​கிலாந்து அணி​யின் வேகப் ​பந்து வீச்​சாளர் மார்க் வுட், ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரில் இருந்து விலகி உள்​ளார்.

முதல் டெஸ்ட் போட்​டி​யில் விளை​யாடிய அவர், 11 ஓவர்​களை மட்​டுமே வீசிய நிலை​யில் விக்​கெட் ஏதும் கைப்​பற்​ற​வில்​லை. 2-வது டெஸ்​டில் காயம் காரண​மாக மார்க் வுட் களமிறக்​கப்​பட​வில்​லை.

அவருக்கு பதிலாக இங்​கிலாந்து அணி​யில் மேட் ஃபிஷர் அணியில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். ஃபிஷர் கடந்த 2022-ம் ஆண்டு மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற டெஸ்ட் போட்​டி​யில் இங்​கிலாந்து அணிக்​காக களமிறங்​கி​யிருந்​தார். அதன் பின்​னர் தற்​போது​தான் அணி​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT