அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடிலெய்டில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் குவித்தது. டாம் பேன்டன் 121 ரன்களை (99 பந்துகள், 12 பவுண்டரி, 4 சிக்ஸர்) விளாசினார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 44.3 ஓவர்களில் 220 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது இந்த ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
அற்புதமாக விளையாடி சதமடித்த டாம் பேன்டன் ஆட்டநாயகனாகத் தேர்வானார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 18-ம் தேதி ஹோபர்ட் நகரில் நடைபெறவுள்ளது.